Nadhiya: நடிகை நதியாவின் இளமை ரகசியம் இதுவா? அவரே சொன்ன சீக்ரட் விஷயம்!
Nadhiya About Her Youth Secret:சினிமாவில் 80ஸ் முதல் 90ஸ் காலகட்டம் வரை மிகவும் பிரபலமான நடிகையாக இருந்துவந்தவர் நதியா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் தனது இளமையின் ரகசியம் என்ன என்பது குறித்து முன்பு நிகழ்ச்சி ஒன்றில் ஓபனாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் சிறந்த நடிகையாக இருந்துவந்தவர் நதியா (Nadhiya). இவர் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் பிரபு (Prabhu) வரை பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு சினிமாவில் முதல் படமாக அமைந்தது “நோக்கிட தூரத்து கண்ணும் நாட்டு” (Nokketha Doorathu Kannum Nattu). கடந்த 1984ம் ஆண்டில் வெளியான இந்த மலையாள படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக நதியா அறிமுகமானார். இவரின் முதல் அறிமுகம் மலையாளம் என்பதால் இவருக்கு மலையாள மொழிகளில் ரசிகர்கள் அதிகம். மேலும் பல்வேறு மலையாள படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் நடிகை நதியாவின் முதல் தமிழ் படம் “பூவே பூச்சூடவா” (Poove Poochudava). கடந்த 1985ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநர் ஃபாசில் இயக்கியிருந்தார். இது தமிழ் மற்றும் மலையாள மொழி படமாக வெளியாகியிருந்தது.
இப்படத்தை அடுத்ததாக தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் இவர் தற்போது சினிமாவில் அம்மா மற்றும் சிறப்பு வேடங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நதியா, தனது இமையின் ரகசியம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க : 100 ஸ்டண்ட் மேன்ஸ்.. விறுவிறுப்பாக நடக்கும் விஷாலின் மகுடம் பட க்ளைமேக்ஸ் ஷூட்டிங்.. வெளியான வீடியோ பதிவு இதோ!
இளமையின் ரகசியம் குறித்து ஓபனாக பேசிய நதியா :
அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் நதியைவிடம், “மேம் உங்களின் இளமையின் ரகசியம் என்ன, என்னுடன் படித்தவர்களுக்கே வயதாகிவிட்டது. ஆனால் உங்களுக்கு இன்னும் வயதே ஆகவில்லையே, இதற்கு என்ன வழிமுறையை பின்பற்றுகிறீர்கள் ?
என கேள்வி கேட்டார்.
இதையும் படிங்க : தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் கதையை முதலில் நிராகரித்த நடிகை.. அட இவரா?
அந்த கேள்விக்குப் பதிலளித்த நதியா, ” என்னை நன்றாக பாராட்டுகிறீர்கள், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அப்படி ஒரு ரகசியமும் இல்லை. கடினமாக உழையுங்கள். நான் நல்ல சாப்பிடுவேன், நல்ல உடற்பயிற்சி செய்வேன் மற்றும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் . அவ்ளோதான் எனது ரகசியம்” என அந்த நிகழ்ச்சியில் ஓபனாக பேசியிருந்தார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை நதியா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை நதியா தற்போது பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இவர் தற்போது தனது குடும்பத்தை பார்க்கும் நோக்கத்துடன் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிவருகிறார். ஆனாலும் அவ்வப்போது படங்களில் முக்கிய வேடங்கள் மற்றும் வெப் தொடர்கள் போன்றவற்றிலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.