Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Magudam: 100 ஸ்டண்ட் மேன்ஸ்.. விறுவிறுப்பாக நடக்கும் விஷாலின் மகுடம் பட க்ளைமேக்ஸ் ஷூட்டிங்.. வெளியான வீடியோ பதிவு இதோ!

Magudam Shooting Update: நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். ரவி அரசு இயக்கத்தில் இவர் நடித்துவந்த படம்தான் மகுடம். தற்போது இப்படத்தை விஷால்தான் இயக்கிவருகிறார். இந்நிலையில் 100 ஸ்டண்ட் மேன்களுடன் நடைபெறும் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் குறித்தான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Magudam: 100 ஸ்டண்ட் மேன்ஸ்.. விறுவிறுப்பாக நடக்கும் விஷாலின் மகுடம் பட க்ளைமேக்ஸ் ஷூட்டிங்.. வெளியான வீடியோ பதிவு இதோ!
மகுடம் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Nov 2025 18:42 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷால் (Vishal). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக மத கஜ ராஜா (Madha Gaja Raja) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த இடமானது கடந்த 2013ம் ஆண்டில் உருவான நிலையில், சுமார் 12 வருடங்களுக்கு பின் இந்த 2025ம் ஆண்டு ஜனவரியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்தாக விஷால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். பல்வேறு மேடைகளில் கை நடுக்கங்களுடனும் காணப்பட்டார். அந்த வகையில் இவரின் நடிப்பில் மகுடம் (Magudam) திரைப்படமானது உருவாகவுள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. இப்படத்தின் ஷூட்டிங்கும் பூஜைகளுடன் 2 மாதங்களுக்கு முன் தொடங்கியிருந்தது.

இப்படத்தை இயக்குநர் ரவி அரசு (Ravi Arasu) இயக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்து வந்தது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குநர் ரவி அரசுக்கும், விஷாலுக்கும் நடுவே பிரச்னைகள் நடைபெற்றுவந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மகுடம் படத்தை தற்போது விஷால்தான் இயக்கிவருகிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் குறித்து அப்டேட் பதிவு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் வீட்டில் விசேஷம்… வைரலாகும் பதிவு!

மகுடம் திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்து வெளியான பதிவு :

இந்த மகுடம் திரைப்படத்தில் மூலமாகத்தான் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், இது அவரின் முதல் திரைப்படமாகும். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தொடர்பான ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், இந்த காட்சிகளுக்காக சுமார் 100 ஸ்டண்ட் மேன்ஸ் மற்றும் 800 படக்குழுவினர் பணியாற்றிவருவதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பைசன் படத்திற்கு சிலம்பரசன் கொடுத்த விமர்சனம் – நெகிழ்ந்த மாரி செல்வராஜ்

இது தொடர்பான வீடியோ பதிவையும் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

மகுடம் திரைப்படத்தின் நடிகர்கள் :

இந்த மகுடம் படத்தில் விஷால் 3 வேடங்களில் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகைகள் துஷாரா விஜயன் மற்றும் அஞ்சலி என இரு நடிகைகள் நடித்துவருகிறார்கள். இந்த மகுடம் படமானது  கேங்ஸ்டர்ஸ் தொடர்பான கதைக்களத்தில் உருவாகிவருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துவரும் நிலையில், இப்படம் வரும் 2026ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம்.