பைசன் படத்திற்கு சிலம்பரசன் கொடுத்த விமர்சனம் – நெகிழ்ந்த மாரி செல்வராஜ்
Director Mari Selvaraj: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பைசன். இந்தப் படம் குறித்து நடிகர் சிம்பு சொன்ன விமர்சனம் பிரமிப்பாக இருந்தது என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளைப் படங்களாக எடுத்து ரசிகர்களிடையே தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj). பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் மாரி செல்வராஜ். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே மாரி செல்வராஜிற்கு மாபெரும் வரவேற்பைப் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது. இந்தப் படத்தை ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். முதல் படமே இயக்குநர் மாரி செல்வராஜிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவதாக நடிகர் தனுஷ் உடன் கூட்டணி வைத்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்படி முதல் படம் போலவே இந்த கர்ணன் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தொடர்ந்து மாமன்னன், வாழை ஆகியப் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமாவில் அடுத்ததாக இயக்கி வெளியாகி உள்ள படம் பைசன் காளமாடன். நடிகர் துருவ் விக்ரன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கி உள்ளார். அதன்படி இந்தப் படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி உள்ள நிலையில் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
பைசன் படத்திற்கு சிலம்பரசன் கொடுத்த விமர்சனம்:
அதன்படி சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் அளித்தப் பேட்டியில் தனது பைசன் படத்திற்கு நடிகர் மாரி செல்வராஜ் அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, பைசன் படத்திற்கு என்னுடன் பணியாற்றும் சக சினிமா நண்பர்கள் போன் செய்து என்னுடைய கிராஃப்ட் பத்தி பேசுனாங்க.
ஆனா நடிகர் சிம்பு எனக்கு கால் பண்ணி பேசியபோது ரொம்ப ஆச்சரியப்படுத்தியது. அவர் என்ன சொன்னார்னா ஒரு கட்டத்துக்கு மேல நீங்க வேலை செய்ய செய்ய உங்களுக்கு தெரியாமலேயே ஒரு அற்புதத்தை நிகழ்த்தகூடிய ஆளா நீங்க மாறிடுவீங்க. நீங்க என்ன செஞ்சாலும் அது அற்புதத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும். அப்படி ஒரு அற்புதம் இந்தப் படத்தில் நடந்து இருக்கதா நான் நம்புறேன் என்றார். அது எனக்கு ரொம்ப எமோஷ்னலா இருந்தது என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Also Read… சிரஞ்சீவி படத்தில் நான் நடிக்கிறேனா? மாளவிகா மோகனன் விளக்கம்
இணையத்தில் கவனம் பெறும் மாரி செல்வராஜ் பேச்சு:
#SilambarasanTR Called MariSelvaraj & Appreciated #Bison 🔥
MariSelvaraj says he was surprised & Emotional to get call from STR♥️✨pic.twitter.com/RCVwP21duW— AmuthaBharathi (@CinemaWithAB) October 31, 2025
Also Read… ரசிகர்களால் தியேட்டர் போறதையே நிறுத்திட்டேன் – செல்வராகவன் ஓபன் டாக்



