Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரசிகர்களால் தியேட்டர் போறதையே நிறுத்திட்டேன் – செல்வராகவன் ஓபன் டாக்

Selvaraghavan: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்து தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் செல்வராகவன். இவரது நடிப்பில் அடுத்ததாக ஆர்யன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் செல்வராகவன் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரசிகர்களால் தியேட்டர் போறதையே நிறுத்திட்டேன் – செல்வராகவன் ஓபன் டாக்
செல்வராகவன் Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Oct 2025 16:16 PM IST

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் செல்வராகவன் (Director Selvaraghavan). இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்று தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டார். இவரது படங்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பேச தயங்கிய பல விசயங்களை தனது படங்களின் மூலம் வெளிப்படையாக பேசிய இயக்குநர்கள் சிலரில் செல்வராகவன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தொடர்ந்து படங்களை இயக்கி வந்த இயக்குநர் செல்வராகவன் விஜயின் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் இருந்து நடிக்கவும் தொடங்கினார்.

இந்தப் படத்தை தொடர்ந்து பல இயக்குநர்களின் படங்களில் நடிப்பதன் மூலம் இயக்குநராக மட்டும் இன்றி நடிகராகவும் தான் ஒரு சிறந்த நபர் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தினார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல செல்வராகவனின் நடிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ரசிகர்களால் தியேட்டர் போறதையே நிறுத்திட்டேன்:

இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்துள்ள ஆர்யன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் செல்வராகவன் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் செல்வராகவன் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, எனக்கு திரையரங்குகளில் படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் தியேட்டருக்கு போனாலே ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போனு கேட்டுட்டே இருக்காங்க. இதனாலையே என்னால தியேட்டருக்கு போய் படம் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தேரே இஸ்க் மெய்ன் படம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட போஸ்ட்!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் சங்கர்!