Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தேரே இஸ்க் மெய்ன் படம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட போஸ்ட்!

Music Director AR Rahman: பான் இந்திய அளவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக இவரது இசையில் வெளியாக உள்ள படம் தேரே இஸ்க் மெய்ன்.

தேரே இஸ்க் மெய்ன் படம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட போஸ்ட்!
ஏ.ஆர்.ரகுமான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Oct 2025 16:34 PM IST

பான் இந்தியா மட்டும் இன்றி ஹாலிவுட் வரை பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் இட்லி கடை. தமிழ் மொழியில் உருவான இந்தப் படத்தை நடிகர் தனுஷே எழுதி இயக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் நாயகனாக நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது இந்தி சினிமாவில் நாயகனாக நடித்து அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தேரே இஸ்க் மெய். இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை கிருத்தி சனோன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தீப்பொறி சினிமாவாக மாறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் முன்னதாக தேரே இஸ்க் மெய்ன் படத்திலிருந்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாகவது தீப்பொறி சினிமாவாக மாறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு என்று வருகின்ற நவம்பர் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு தேரே இஸ்க் மெய்ன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறித்து பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… படையப்பா படத்தில் ஒரு காட்சிக்கு ரஜினியிடம் கெஞ்சி தான் நடிக்க வைத்தேன் – கே.எஸ்.ரவிக்குமார்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய் சேதுபதி – வைரலாகும் தகவல்