Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மீண்டும் இணைந்து பணியாற்றுவோம்.. பிரதீப் ரங்கநாதனை வாழ்த்திய டியூட் படக்குழு!

Dude Film Crew: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் சமீபத்தில் டியூட் படமானது வெளியாகி மக்களிடையே எதிர்பாராத வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் பழைய ட்விட்டர் பதிவு ஒன்றிற்கு டியூட் படக்குழு ரியாக்ட் செய்து மற்றும் வாழ்த்தி பதிவை வெளியிட்டுள்ளது.

மீண்டும் இணைந்து பணியாற்றுவோம்.. பிரதீப் ரங்கநாதனை வாழ்த்திய டியூட் படக்குழு!
பிரதீப் ரங்கநாதன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Oct 2025 22:33 PM IST

தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் மக்களிடையே பிரபலமாகிவரும் நாயகனாக இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) . இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை மொத்தமே 3 படங்கள்தான் வெளியாகியிருக்கிறது. இந்த வெளியான 3 படங்களும் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட் கொடுத்திருக்கிறது. இவர் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குநராக நுழைந்தார். நடிகர் ரவி மோகனின் கோமாளி என்ற படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமான இவர், லவ் டுடே (Love Today) என்ற படத்தை இயக்கி அவரே ஹீரோவாகவும் அறிமுகமானார். இந்த படம்தான் இவருக்கு முதல் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக த்ற்போதுவரையிலும் படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இவரின் நடிப்பில் டிராகன் (Dragon) என்ற திரைப்படமானது வெளியானது. இந்த படமும் மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது.

இந்த படத்தை அடுத்ததாக இந்த 2025ம் ஆண்டில் 2வது வெளியாகியுள்ள படம்தான் டியூட் (Dude). இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனை வாழ்த்தி மைத்ரி மூவி மேக்கர்ஸ் படக்குழு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் பிரதீப் ரங்ககநாதன் 10 வருடத்திற்கு முன் பதிவிட்ட ட்வீட்டிற்கு ரியாக்ட் செய்யும் விதத்தில் இந்த பதிவு உள்ளது.

இதையும் படிங்க : ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு மாஸ் நடிகருடன் இணையும் நெல்சன் திலீப்குமார்.. அட இந்த ஹீரோவா?

பிரதீப் ரங்கநாதனை வாழ்த்தி மைத்ரி மூவி மேக்கர்ஸ் படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த பதிவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம், பிரதீப் ரங்கநாதன் சுமார் 10 வருடங்களுக்கு முன்னே பதிவிட்ட , பதிவிற்கு ரியாக்ட் செய்யும் விதத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் பதிய பதிவை வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ், “உங்கள் சினிமா கனவுகளைக் கொண்டாட இந்த ட்வீட்டை வெளியிடுகிறேன் என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

இதையும் படிங்க : இப்படித்தான் நீங்கள் வலியை கலையாக மாற்றுகிறீர்கள் – பைசன் படத்தைப் பாராட்டிய நடிகை நிவேதா பெத்துராஜ்!

இந்த பயணமானது சிறப்பானது, உங்களைப் போன்ற பல நம்பமுடியாத திறமையாளர்களின் கூட்டு முயற்சிக்கு நன்றி. மேலும் பிரதீப் ரங்கநாதன், நீங்கள் மேலும் வளருங்கள், பெரிய வெற்றிகளுக்கு வாழ்த்துகள். மீண்டும் இணைந்து பணியாற்றுவோம்” என்று அந்த படக்குழு அந்த பதிவில் தெரிவித்துள்ளது.

டியூட் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு?

இந்த டியூட் படமானது மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இதில் பிரதீப் ரங்ககநாதன் மற்றும் மமிதா பைஜூவும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியான நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவந்தது. இப்படம் வெளியாகி 10 நாட்களான நிலையில், மொத்தமாக சுமார் ரூ 125 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.