AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக் உறுதி… எச்சரிக்கை வாசகம் கட்டாயம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Microplastics Health Risk: குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அது குறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருவதாகவும் மத்திய உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்த நிலையில், அனைத்து குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகம் இடம் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக் உறுதி… எச்சரிக்கை வாசகம் கட்டாயம் –  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Feb 2026 21:15 PM IST

சென்னை, பிப்ரவரி 6 : குடிநீர் பாட்டில்களில் (Water Bottle) மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை வாசகங்களை கட்டாயமாக அச்சிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் மனித உடலில், குறிப்பாக கருப்பை பிளாசண்டாவில் கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானா முன்வந்து எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ் குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் பிப்ரவரி 6, 2025 அன்று விசாரணைக்கு வந்தது.

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்ட்டிக் இருப்பது உறுதி

விசாரணையின் போது, மத்திய சுகாதாரத் துறை சார்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) தாக்கல் செய்த அறிக்கையில், பிளாஸ்டிக்கில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மைக்ரோபிளாஸ்டிக் மனித உடலுக்கு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து, லக்னோ, கொச்சி ஆகிய இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதையும் படிக்க : விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதமீறலும் இல்லை.. ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

மேலும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் தரநிலை ஆணையத்தின் அறிக்கையில், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து குடிநீர் பாட்டில்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், அவற்றில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பிளாஸ்டிக் பார்சல்களில் விற்பனை செய்யப்படும் உப்பு மற்றும் சர்க்கரையிலும் மைக்ரோபிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

எச்சரிக்கை வாசகம் கட்டாயம்

இதனையடுத்து உணவு பாதுகாப்பத்துறை அறிக்கையை படித்த நீதிபதிகள், மைக்ரோ பிளாஸ்டிக்குகளால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் ஆபத்து உண்டாகும் அபாயம் இருக்கிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது மிகவும் மோசமான விஷயம். இதனையடுத்து குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் குறித்து எச்சரிக்கை வாசங்களை கட்டாயம் அச்சிட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதையும் படிக்க : புதுச்சேரியில் இருந்து மது கடத்தலுக்கு செக்..கலால் துறையின் பக்கா ஏற்பாடு..என்ன அது!

இதற்கு பதிலளிக்த உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், மைக்ரோ பிளாஸ்டிக்குகள் குறித்த ஆய்வுகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. இதனால் உடனடியாக எச்சரிக்கை வாசகம் சேர்ப்பது சேர்ப்பது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என தெரிவித்தனர். அவர்களது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆய்வுகளை விரைவாக முடித்து, பொதுநலன் கருதி குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என தெளிவுபடுத்தியது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை தேதிகள் குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

 

Follow Us