AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரியில் இருந்து மது கடத்தலுக்கு செக்..கலால் துறையின் பக்கா ஏற்பாடு..என்ன அது!

Puducherry Liquor Smuglling: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் புதுச்சேரியில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கும் மது பானங்கள், பணம், பரிசு பொருள்கள் உள்ளிட்டவற்றை கடத்துவதை தடுப்பதற்காக சுமார் 41 இடங்களில் கலால் துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன .

புதுச்சேரியில் இருந்து மது கடத்தலுக்கு செக்..கலால் துறையின் பக்கா ஏற்பாடு..என்ன அது!
புதுச்சேரி எல்லையில் 41 சோதனை சாவடிகள் அமைப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 06 Feb 2026 08:07 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரி அண்டை மாநிலமாக இருந்து வருகிறது. புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை தமிழக பகுதியை சேர்ந்த சிலர் அவ்வப்போது கடத்தி வரும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இதில், தமிழக எல்லையும், புதுச்சேரி எல்லையும் பூகோள ரீதியில் பிண்ணி பிணைந்து இருப்பதால், இந்த சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது, புதுச்சேரியில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கும் மதுபானங்கள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கவும், கண்காணிக்கவும் புதுச்சேரி எல்லையில் சுமார் 41 இடங்களில் புதிதாக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பிராந்தியத்தில் 15 சோதனை சாவடிகள்

இதில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபான கடத்தலை தடுப்பதற்காக புதுச்சேரி பிராந்தியத்தில் 15 சோதனை சாவடிகள், காரைக்கால் பிராந்தியத்தில் 10 சோதனை சாவடிகள், ஏனாம் பிராந்தியத்தில் 10 சோதனை சாவடிகள், மாஹே பிராந்தியத்தில் 6 சோதனை சாவடிகள் என மொத்தம் 41 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி பிராந்தியத்தில் கோரிமேடு, திருக்கனூர், மதகடிப்பட்டு, மடுகரை, அய்யங்குட்டி பாளையம், சேதராப்பட்டு, தவளகுப்பம் ஆகிய பகுதிகள்.

மேலும் படிக்க: பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்பு…தமிழக அரசு விடுத்த முக்கிய எச்சரிக்கை!

கலால் துறை சார்பில் அமைக்கப்பட்ட சாவடி

மேலும், முள்ளோடை, கனக செட்டிகுளம், சொரியங்குப்பம், காமராஜர் மணி மண்டபம், உச்சிமேடு, மணமேடு, கரையான் புத்தூர், குருவி நத்தம் உள்ளிட்ட 15 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி கலால் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் புதுச்சேரி மாநிலத்துக்கு வரும் வாகனங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்தி மது பானங்கள், பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவை வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறதா என்பது தொடர்பாக சோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளை அமைக்க டெண்டர்

அதன்படி, இந்த சோதனை சாவடிகளில் கலால் துறையினர் மற்றும் போலீசார் சோதனை மேற்கொள்ள உள்ளனர். இந்த 41 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள், இருக்கைகள், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைப்பதற்காக தனியார் நிறுவனங்களுக்கு கலால் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதே போல, கலால் துறை சார்பில் பறக்கும் படைகள் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ரூ.25 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்

கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, புதுச்சேரி மாநிலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, வருகிற சட்டமன்றத் தேர்தலில் இது போன்ற மது கடத்தலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: சென்னையில் மின்சார ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை…பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்!

Follow Us