AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகள்.. இனி மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் – தவெக வெளியிட்ட அறிவிப்பு..

TVK Election Manifesto: தவெகவின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும், மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிய, ஏற்கனவே இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதிக அளவில் மக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால், அது அவ்வப்போது முடங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது மக்கள் மின்னஞ்சல் மூலம் தங்களது பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகள்.. இனி மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் – தவெக வெளியிட்ட அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Feb 2026 07:17 AM IST

சென்னை, பிப்ரவரி 6, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்க புதிய யுத்தி ஒன்றை கையாண்டுள்ளது. அதாவது, பொதுமக்கள் தங்களது விருப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவின் தேர்தல் அறிக்கை:

இதற்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பொதுமக்கள் தங்களது கருத்துகளை இணையதளம் வழியாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரே நேரத்தில் அதிகப்படியான பயனாளர்கள் இணையதளத்தை பயன்படுத்தியதால், அது அவ்வப்போது முடங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது மின்னஞ்சல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அதிமுக, திமுக, தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக உள்ளன. இதில், அதிமுக மற்றும் திமுக தங்களது கூட்டணிகளை ஏறத்தாழ முழுமையாக இறுதி செய்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு தயாராகும் தவெக:

தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரையில், விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என விஜய் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வரை எந்தக் கட்சியும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கவில்லை. இருப்பினும், கட்சி தரப்பில் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்பு…தமிழக அரசு விடுத்த முக்கிய எச்சரிக்கை!

இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் பிரச்சாரங்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரக்கூடிய 13ஆம் தேதி சேலத்தில் மக்களை சந்திப்பதற்காக விஜய் அனுமதி கோரி ஒரு பக்கம் கடிதம் அனுப்பியுள்ளார். மற்றொரு பக்கம், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டங்கள், செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த தொகுதிகள் கட்சிக்கு சாதகமாக உள்ளன போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மின்னஞ்சல் மூலம் தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரை:

இதில் முக்கியமாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும், மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிய, ஏற்கனவே இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதிக அளவில் மக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால், அது அவ்வப்போது முடங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது மக்கள் மின்னஞ்சல் மூலம் தங்களது பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பதிவில், “ தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாகப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை இணையத்தளத்தின் வாயிலாகக் கழகத்திற்குத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அந்த இணையத்தளமானது ஒரே நேரத்தில் அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுவதால், ஸ்தம்பித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம். tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் பரிந்துரைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us