கால்பந்து விளையாட்டில் சாதனைப்படைத்த அஜித் குமாரின் மகன் – வைரலாகும் ஷாலினி அஜித் பதிவு
Aadvik Ajith wins foodball match | நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி அஜித் குமாரின் மகன் தான் ஆத்விக் அஜித். இவர் கால்பந்து விளையாட்டில் வெற்றிப் பெற்றதை ஷாலினி அஜித் குமார் புகைப்படம் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்ப்பது போல அஜித் குமாரின் சொந்த வாழ்க்கை தொடர்பான செய்திகளும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. சினிமாவைப் பொருத்தவரை ஒன்றாக நடிக்கும் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் இயல்பான ஒன்றாக உள்ளது. அப்படி தமிழ் சினிமாவில் படத்தில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்தவர்கள் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி. இந்த தம்பதி திருமணம் செய்து சுமார் 25 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் திருமண வாழ்க்கை தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதில் மூத்ததாக பெண் குழந்தையும் இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தனர். மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆவர்.




கால்பந்து விளையாட்டில் சாதனைப்படைத்த அஜித் குமாரின் மகன்:
இந்த நிலையில் அஜித் குமார் மற்றும் ஷாலினியின் மகள் தொடர்பான செய்திகள் பெரிய அளவில் வெளியாகவில்லை என்றாலும் மகன் ஆத்விக் தொடர்பான செய்திகள் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றது. அந்த வகையில் தந்தையை போல விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட ஆத்விக் தற்போது கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் வெற்றிப் பெற்று கோப்பையை பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு ஷாலினி அஜித் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Vishal: சினிமாவில் 22வது வருடம்.. ஸ்பெஷல் பதிவை வெளியிட்ட விஷால்!
நடிகை ஷாலினி அஜித் குமார் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… ஒன்ஸ் மோர் படத்திலிருந்து வெளியானது பதில் சொல் பொயட்ரி வீடியோ