முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயின்மென்ட்… விஸ்வநாத் & சன்ஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Vishwanath And Sons Movie Review | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை தற்போது இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது விஸ்வநாத் & சன்ஸ் படம். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். அவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசர், ஹர்ஷா செமுடு, வி ஜே பப்பு, பவானி ஸ்ரீ, சுனில் ரெட்டி, ராஜீவ் மேனன், ஜார்ன் சுர்ராவ், காளி வெங்கட், ஜார்ஜ் மரியன், சுதா, தீபா சங்கர், கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ், ரகு பாபு, ஹைப்பர் ஆதி, சர்வதாமன் பானர்ஜி, கராத்தே கார்த்தி, முக்தர் கான் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இந்த நிலையில் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
விஸ்வநாத் & சன்ஸ் படம் எப்படி இருக்கு?
40 வயது மதிக்கத்தக்க சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா) ஒரு மிகப்பெரிய பிசினஸ் மேனாக வலம் வருகிறார். சின்ன வயதில் இருந்தே துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு தங்கத்தை வென்று இந்தியாவிற்கு பெறுமை சேர்க்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய அம்மா நிர்மலா தேவி (ராதிகா) அவரை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று வாரிசு வேண்டும் இந்த வீட்டிற்கு என்று தொடர்ந்து வற்புறுத்த சஞ்சய் ஒரு முடிவு செய்கிறார்.




அமெரிக்காவில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் ஒரு வருடமாக சஞ்சய் பேசி வரும் நிலையில் அந்த மருத்துவரை சூர்யா திருமணம் செய்ய உள்ளாரா என்று பார்த்துகொண்டு இருக்கும் போது அமெரிக்காவில் இருந்து வாடகை தாய் மூலமாக ஒரு மகனைப் பெற்று இந்தியாவிற்கு தூக்கி வருகிறார் சஞ்சய். முதலில் அந்த குழந்தையை ஏற்க மனக் இல்லாத சஞ்சயின் தாய் பிறகு அந்த குழந்தையிடம் அதிக பாசமாக இருக்கிறார்.
மகிழ்ச்சியா சென்று கொண்டு இருக்கும் வாழ்க்கையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக போன் மாரோ அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. அதில் பெற்றோர்களின் போன் மேரோ எடுத்து செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூற சூர்யாவின் போன் மேரோ குழந்தைக்கு ஏற்புடையதாக இல்லை என்று வாடகை தாய் தான் கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகின்றது.
Also Read… இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கியது தர்மன் படக்குழு – வைரலாகும் வீடியோ
வாடகை தாயில் இருக்கும் ஒரு சூப்பர் ட்விஸ்ட்:
இதன் காரணமாக வாடகை தாயை தேடி செல்கிறார் நடிகர் சூர்ய. அப்படி செல்லும் போதுதான் அந்த வாடகை தாயே மமிதா என்பது தெரிகிறது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து குழந்தைக்கு அறுவை சிக்கை செய்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் மமிதா அந்த குடும்பத்துடனும் சூர்யா உடனும் எப்படி நெறுக்கமாக பழகுகிறார். அதனைத் தொடர்ந்து என்ன எல்லாம் நடந்தது என்பதே இந்தப் படத்தின் கதை.
முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் பாணியில் உருவாகி உள்ள இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பார்ப்பதற்கு மிகவும் ஃபீல் குட்டாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.