AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குரங்குடன் வீடியோ வெளியிட்டு சிக்கலில் சிக்கிய நடிகர் விக்ரம்

Vikram Gets Into Trouble for Posting Video of Playing with Monkey | தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில் விக்ரம் சமீபத்தில் வெளியிட்ட பதிவு தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

குரங்குடன் வீடியோ வெளியிட்டு சிக்கலில் சிக்கிய நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Aug 2026 21:13 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் தற்போது அவரது 63-வது படத்தில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்த படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. படங்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருவது போல அவ்வபோது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றார். அவ்வாறு அவர் வெளியிடும் பதிவுகளும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதன்படி சமீபத்தில் நடிகர் விக்ரம் ஒரு குரங்கு உடன் விளையாடுவது போல வீடியோ பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும் கிப்பான் என்ற வகையை சேர்ந்த அந்த குரங்குடன் நடிகர் விக்ரம் வித்யாசமான போஸ்களை கொடுத்து மிகவும் மகிழ்ச்சியாக விளையாடி வந்தார். அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. ஒரு பக்கம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்த அந்த வீடியோ மற்றொரு பக்கம் விக்ரமிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… இவ்வளவு அழகான ரொமாண்டிக் ட்ராமா படம் ஏன் கொண்டாடப்படவில்லை? இந்தியில் வெளியான ஏக் தின் படத்தின் விமர்சனம் இதோ

குரங்குடன் வீடியோ வெளியிட்டு சிக்கலில் சிக்கிய நடிகர் விக்ரம்:

அந்த வகையில் நடிகர் விக்ரம் விளையாடுவது போல வெளியிட்ட அந்த குரங்கு இந்தோனிசியவில் அரிய வகையாக கருதப்படும் லார் கிப்பன் என்ற வகையைச் சேர்ந்த குரங்கு என்றும் அந்த குரங்கை இந்தியாவில் வளர்பதற்கு கடும் விதிமுறைகள் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் அந்த குரங்கை உரிய விதிமுறைகளுடன் கொண்டு வந்துள்ளனரா என்று வனத்துறை தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நடிகர் விக்ரம் அந்த வீடியோவை நீக்கியுள்ளதால் அது விதிமீறலில் கொண்டுவரப்பட்ட குரங்கா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அஜித் குமாரின் டேர் டெவில் படத்தில் இணையும் மாபெரும் நடிகர்கள்.. அட இவர்களா?

Follow Us