Chiyaan Vikram: குரங்குடன் சேர்ந்து அட்ராசிட்டி செய்த சியான்.. இணையத்தில் ரசிகர்களை கவரும் வீடியோ!
Chiyaan Vikram's Viral Monkey Video: சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சியத்தான் விக்ரம். இவர் தனது இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருந்துவருகிறார். நகைச்சுவையான மற்றும் தனது பொழுதுபோக்கு வீடுயோக்களை அவர் இணையத்தில் பகிர்ந்துவருவது வழக்கமே. அந்த வகையில் குரங்கு ஒன்றுடன் விளையாடுவதுபோன்ற வீடியோ ஒன்றை தற்போது அவர் பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவின் ரசிகர்களால் அன்போடு “சியான்” (Chiyaan) என்று அழைக்கப்பட்டுவருபவர் விக்ரம் (Vikram). இவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நாயகனாக இருந்துவருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் ஆரம்பகாலங்களில் நடித்துவந்தார். இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 62 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது 63வது படத்தில் இயக்குநர் ஆனந்த் சங்கர் (Anand Shankar) இயக்கத்தில் இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் ஏற்கனவே இருமுகன் என்ற படம் வெளியாகி ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக, இளம் நடிகை ரியா ஷிபு (Riya Shibu) நடித்துவருகிறார். இவ்வாறு ஒருபுறம் படங்களில் பிசியாக இருந்தாலும், மற்றொருபுறம் தனது வாழ்க்கையை விக்ரம் சிறப்பாக என்ஜாய் செய்துவருகிறார்.
இயற்கையான இடங்களுக்கு ட்ரிப், வனவிலங்கு சரணாலயம் என தனது விடுமுறை நாட்களை இயற்கையோடு இணைந்து செலவு செய்துவருகிறார். இவர் எப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துவருகிறார். அந்த விதத்தில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் குரங்கு ஒன்றுடன் விக்ரம் வெளியிட்ட வீடியோ, இணையத்தில் ரசிகர்களை கவர்ந்துவருகிறது.




இதையும் படிங்க: பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினான் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் – 13 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் தலைவா படம்!
குரங்குடன் நடிகர் சியான் விக்ரம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:
View this post on Instagram
இந்த வீடியோவில் நடிகர் சியான் விக்ரம், குரங்கு ஒன்றுடன் விளையாடுவது போன்று இருக்கிறது. சியான் விக்ரம் கிப்பான் என்ற வகையை சேர்ந்த குரங்கு ஒன்றை கையில் வைத்திருக்கிறார். அந்த குரங்கும் எந்தவித பயமும் இல்லாமல், விக்ரமிடம் நண்பனை போலவே பழகுகிறது. அந்த குரங்கை தடவிகொடுத்தவாறே, விக்ரம் அதனிடம் செல்லமாக பேசுகிறார்.
இதையும் படிங்க: வெளியீட்டிற்கு 5 நாட்களே உள்ளது… விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு வெளியிட்ட புது போஸ்டர்!
மேலும் அந்த குரங்கும் செய்யும் ஒவ்வொரு செய்கையையும் விக்ரமும் சேட்டு காட்டுகிறார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது. செல்ல குழந்தையை போல விக்ரம் கொஞ்சிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
விக்ரம் நடித்துவரும் புது திரைப்படம்:
நடிகர் விக்ரம் தற்போது இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சியான்63 படத்தில் நடித்துவருகிறார். இதை விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ரியா ஷிபுவும் நடித்துவருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவருகிறார். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படமானது உருவாகிவருகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை படக்குழு 2026ம் ஆண்டு இறுதி அல்லது 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாம்.