AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Chiyaan Vikram: சியான் விக்ரமின் 63வது படத்தின் அறிவிப்பு வீடியோ இதோ!

Vikram 60th Birthday Special: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் சியான் விக்ரம். இவர் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில், புதிய படத்தில் இணையவுள்ளார் என கூறப்பட்ட நிலையில், இன்று (17/04/2026) விக்ரமின் பிறந்தநாளில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Chiyaan Vikram: சியான் விக்ரமின் 63வது படத்தின் அறிவிப்பு வீடியோ இதோ!
சியான்63 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Apr 2026 19:04 PM IST

நடிகர் சியான் விக்ரம் (Chiyaan Vikram) தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30ஆண்டுகளாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழ் பிரபல இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் மட்டுமே இவர் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். படங்களில் ஒரு கதாபாத்திரத்திற்கு மெனக்கெட்டு தனது உடலை வற்புறுத்தி, பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதற்காக இவர் பல பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அந்த வகையில் இறுதியாக வீர தீர சூரன் படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது இயக்குநர் போட்டி கே ராஜ்குமார் (Bodi K Rajkumar) இயக்கத்தில் புது படத்தில் இணைந்திருந்தார்.

இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று 2027 ஏப்ரல் 17ம் தேதியில், நடிகர் விக்ரம், தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் சியான்63 படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: காவல் துறை அதிகாரியக ஷேன் நிகாம்… ட்ரிடம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இருமுகன் பட இயக்குநருடன் மீண்டும் புது படத்தில் இணைந்த விக்ரம் :

நடிகர் விக்ரம் கடந்த 2016ம் ஆண்டில் வெளியான இருமுகன் என்ற படத்தில், இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணியானது இணைந்துள்ளது. விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இணைத்துள்ள இப்படத்தை சியான்63 என படக்குழு தற்காலிகமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் இப்படத்தில் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது.

விக்ரமின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த எக்ஸ் பதிவு:

இதையும் படிங்க: அப்படி போடு போடு போடு… 22 ஆண்டுகளை கடந்த தளபதி விஜய் – திரிஷாவின் கில்லி திரைப்படம்!

இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்க, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளாராம். இந்த படமானது இருமுகன் படத்தை போலவே வித்தியாசமான ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் விக்ரமிற்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us