AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவல் துறை அதிகாரியக ஷேன் நிகாம்… ட்ரிடம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Dridam Malayalam crime-thriller movie release update here: மலையாள சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஷேன் நிகாம். இவரது நடிப்பில் உருவாகி உள்ள ட்ரிடம் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காவல் துறை அதிகாரியக ஷேன் நிகாம்… ட்ரிடம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
ட்ரிடம்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 17 Apr 2026 17:20 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் ஷேன் நிகாம். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய போதே ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து பல நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டு கேரள மக்களிடையே நன்கு பரிச்சையமானவராக இருந்தார். இப்படி இருக்கும் சூழலில் நடிகர் ஷேன் நிகாம் கடந்த 2013-ம் ஆண்டு முலம் நடிகராக நடிக்க தொடங்கினார். ஆரம்ப காலக்கட்டத்தில் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான கிஸ்மத் என்ற படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் ஷேன் நிகாம். அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் ஷேன் நிகாம் நாயகனாக நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஹால். 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஷேன் நிகாமின் ட்ரிடம் படத்தின் ரிலீஸ் எப்போது?

மலையாள சினிமாவில் தற்போது ஷேன் நிகாம் நாயகனாக நடித்து உள்ள படம் ட்ரிடம். இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் மார்ட்டின் ஜோசப் எழுதி இயக்கி உள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இ4 எண்டர்டெய்ன்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் முகேஷ் ஆர். மேத்தா மற்றும் சி.வி. சாரதி ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற மே மாதம் 8-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தென்னிந்திய சினிமாவில் இந்த வாரம் வெளியான புதுப் படங்களின் லிஸ்ட் இதோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நிறைவடைந்தது ஐ அம் கேம் படத்தின் ஷூட்டிங்… வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழு!

Follow Us