AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிறைவடைந்தது ஐ அம் கேம் படத்தின் ஷூட்டிங்… வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழு!

I Am Game movie shooting wrapped : பான் இந்திய மொழிகளில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

நிறைவடைந்தது ஐ அம் கேம் படத்தின் ஷூட்டிங்… வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழு!
ஐ அம் கேம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Apr 2026 19:23 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது மகனாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் துல்கர் சல்மான். தனது தந்தை மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தனது கடின உழைப்பின் காரணமாக தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என பான் இந்திய மொழிகளிலும் பிசியான நடிகராக வலம் வருகிறார். நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மாபெரும் வெற்றியைப் பெற்று வருகின்றது. அதே நேரத்தில் அவர் நடிக்க மறுக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் அவர் நடிக்க மறுக்கும் படங்கள் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இழப்பதும் வழக்கமாக உள்ளது.

அதே போல நடிகர் துல்கர் சல்மான் தேர்வு செய்து நடிக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அதிகரிக்கும் விதமாக படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. நடிகர் துல்கர் சல்மான் படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி தொடர்ந்து படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெறுவது போல தயாரிப்பில் வெளியாகும் படங்களும் மாபெரும் வெற்றியைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

நிறைவடைந்தது ஐ அம் கேம் படத்தின் ஷூட்டிங்:

இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து தயாரித்து உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படத்தை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எழுதி இயக்கி உள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர்கள் கயடு லோஹர் மற்றும் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு மேலாக விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதனை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார் படத்தின் நாயகனும் தயாரிப்பளருமான துல்கர் சல்மான்.

Also Read… கர படத்தில் மமிதாவை நடிக்கவைத்தது ஏன்? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் விக்னேஷ் ராஜா!

துலகர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Jana Nayagan: ஜன நாயகன் பட கசிவு விவகாரத்தில் திருப்பம்.. மேலும் மூவர் கைது!

Follow Us