AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: ஜன நாயகன் பட கசிவு விவகாரத்தில் திருப்பம்.. மேலும் மூவர் கைது!

Jana Nayagan Movie Piracy Issue: தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக காத்திருந்த திரைப்படம் ஜன நாயகன். இப்படமானது சில நாட்களுக்கு முன் இணையத்தில் லீக் செய்யப்பட்டிருந்த நிலையில், 6 பேரை போலீஸ் கைது செய்துள்ளனர். மேலும் மூன்று முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

Jana Nayagan: ஜன நாயகன் பட கசிவு விவகாரத்தில் திருப்பம்.. மேலும் மூவர் கைது!
Jana Nayagan Film Piracy
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Apr 2026 17:39 PM IST

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் 69வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்த படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை இயக்குநர் எச்.வினோத் (H Vinoth) இயக்கியுள்ள நிலையில், கே.வி.என் ப்ரொடக்ஷன் நிறுவனமானது பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இப்படத்தின் பட்ஜெட் கிட்டதட்ட ரூ 500 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படமானது தெலுங்கில் வெளியான பால கிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆகும். அந்த வகையில் இதில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha Baiju), பாபி தியோல், நரேன் மற்றும் பிரியாமணி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. பின் இப்படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் எடிட்டர் வெர்ஷனில் உள்ள முழு படமும் இணையத்தில் லீக் ஆகியிருந்தது. இந்த படத்தின் கசிவு விவகாரமாக சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே 6 பேரை கைது செய்திருந்த நிலையில், தற்போது மேலும் 3 முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது வேதனையாகவும் பயமாகவும் இருந்தது – இயக்குநர் விக்னேஷ் ராஜா

ஜன நாயகன் பட கசிவு விவகாரத்தில் மேலும் மூவர் கைது:

இந்த ஜன நாயகன் படத்தின் கசிவில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் இந்த ஜன நாயகன் படத்தை கசியவிட்டவர் ஃப்ரிலேன்ஸ் எடிட்டர் என தெரியவந்துள்ளது. அவர் ஜன நாயகன் பட எடிட்டிங் ரூமில் இருந்து படத்தின் ரீலை அனுமதியின்றி எடுத்துள்ளாராம். மேலும் அவர் திருடிய ரீல்களை மொத்தமாக படமாக மாற்றியுள்ளாராம். அந்த படத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து இணையத்தில் கசியவிட்டார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 22 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா ஒன்னா நடிக்கிறாங்க… ஆர்.ஜே.பாலாஜி

இந்த முதல் விசாரணையின்போது மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது முக்கிய குற்றவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஜன நாயகன் பட லீக் விவகாரத்தில் இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் பட லீக் விவகார குற்றவாளிகள் கைது குறித்து வெளியான பதிவு:

இந்த ஜன நாயகன் திரைப்படத்திற்கும் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படவில்லை. அந்த வகையில் இப்படம் தற்போது இணையத்தில் கசிந்துள்ள நிலையில், படத்தை 2026 ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது

Follow Us