AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இணையத்தில் கசிந்த ஜன நாயகன் படம்… தயாரிப்பு நிறுவனத்திற்காக முக்கிய முடிவு எடுத்த நடிகர் விஜய்

Sources said Thalapathy Vijay will act next movie for KVN production : தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஜன நாயகன். இந்தப் படம் இணையத்தில் கசிந்தது தொடர்ந்து மீண்டும் ஒரு முறை அந்த தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க விஜய் ஒப்புகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இணையத்தில் கசிந்த ஜன நாயகன் படம்… தயாரிப்பு நிறுவனத்திற்காக முக்கிய முடிவு எடுத்த நடிகர் விஜய்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Apr 2026 13:19 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் 69-வது படமாக உருவாகி உள்ளது ஜன நாயகன். இயக்குநர் எச்.வினோத் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான துணிவு படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைப் போலவே ஜன நாயகன் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினரும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். மேலும் இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கே வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் சென்சார் பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தொடர்ந்து இந்த ஜன நாயகன் படத்தின் சென்சார் தொடர்பான பிச்சனைகள் இழுபறியாக இருந்த நிலையில் இறுதியாக கடந்த மாதம் ரிவைசிங் கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள் ஜன நாயகன் படத்தினை பார்த்துவிட்டு படத்தினை தேர்தல் கமிட்டிக்கு பரிந்துறைத்து இருந்தனர். மேலும் படம் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக படம் இணையத்தில் கசிந்தது. இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஜன நாயகன் விவகாரதில் முக்கிய முடிவு எடுத்த நடிகர் விஜய்:

ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக இணையத்தில் கசிந்தது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருத்த நஸ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நஸ்டத்திற்கு ஈடு செய்யும் விதமாக நடிகர் விஜய் கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அந்தப் படம் விஜயின் ஃபேர்வலாக இருக்கும் என்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் இந்தப் படத்தை இயக்குநர்கள் அட்லி அல்லது லோகேஷ் கனகராஜ் ஆகியோரில் இருந்து யாரேனும் இயக்குவார்கள் என்று எதிர்பார்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Manithan Deivamagalam: செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் ‘ஸ்னீக் பீக்’ வீடியோ வெளியீடு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு தியேட்டரில் கிடைக்கும் ரெஸ்பான்ஸ்… நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா

Follow Us