லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு தியேட்டரில் கிடைக்கும் ரெஸ்பான்ஸ்… நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா
SJ Suryah Emotionl Post About Love Insurance Kompany Movie: தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்த நிலையில் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அதனைக் கொண்டாடும் விதமாக எஸ்.ஜே.சூர்யா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. சயின்ஸ் பிக்ஷன் பாணியில் ஃபியூச்சரிஸ்டிக்காக வெளியாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து உள்ளார். இவரது நடிப்பில் இரண்டாவதாக வெளியாக இருந்த இந்தப் படம் தொடர் தாமதம் காரணமாக தற்போது 4-வது படமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி முன்னதாக இரண்டு படங்கள் வெளியாகும் அளவிற்கு இந்தப் படம் தாமதம் ஆனது. இவ்வளவு தாமதத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நேற்று 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அந்த வகையில் இந்தப் படம் 2040ம் ஆண்டில் நடைபெறுவது போல காட்டப்பட்டுள்ளது. இதில் டெக்னாலஜியால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மக்களின் கருத்துகளை பார்ந்து மகிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகின்றது.




LIK குறித்து நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா:
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு எப்பேர்ப்பட்ட வரவேற்பு! திரையரங்குகளில் கிடைக்கும் இந்த எதிர்வினையைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கிறேன். கோடை விடுமுறையும், இது போன்ற ஒரு ‘ட்ரெண்டி’யான காதல் திரைப்படமும் ஒன்றாகச் சேர்ந்திருப்பது, திரையரங்குகளில் அமர்க்களமான கொண்டாட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இப்போது முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இணைந்துவிட்டார்; ‘எழுத்து மற்றும் இயக்கம்’ என்ற பிரிவில் அவருக்குக் கிடைக்கும் இந்த மாபெரும் வரவேற்பே அதற்குச் சிறந்த சான்றாகும். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! நமக்கும் இது ஒரு வெற்றிதான். எங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… GV Prakash: அஜித் சார் ஒரு கிரேட் எனர்ஜி.. புகழ்ந்து பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார்!
நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Likthegreat 🔥🔥🔥what a response in theatre🥰🥰🥰semmmmma happy 🥰🥰🥰summer holidays-m , ipdi oru trendy love movie-m onna sikkirukku 🔥🔥🔥kola kutthu dhan 🕺🕺🕺… Dir@VigneshSivan sir joined the top league 👏👏👏 the response for written and directed by card is the proof…
— S J Suryah (@iam_SJSuryah) April 10, 2026
Also Read… இதெல்லாம் நியாயமே இல்லை… தளபதி விஜய்காக குரல் கொடுத்த சூர்யா!