AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பல தடங்களுக்குப் பிறகு வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து இதோ

Love Insurance Kompany Movie X Review: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தப் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல தடங்களுக்குப் பிறகு வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து இதோ
லவ் இன்சூரன்ஸ் கம்பெனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Apr 2026 12:21 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகா வெளியாகுமா ஆகாதா என்ற எதிர்பார்ப்பில் இருந்த படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து படத்திற்கு பிரச்சனைகளும் வந்துகொண்டே இருந்தது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி வெளியீடு வரை தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் ஒரு வழியாக இன்று ஏப்ரல் மாதல் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

இந்தப் படம் ஃபியூச்சரில் காதல் எல்லாம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து உருவாகி உள்ளது. மேலும் சமூகவலைதள பயன்பாட்டால் காதல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளையும் இந்தப் படத்தில் காட்டியுள்ளது ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரிந்தது. இந்த நிலையில் இன்று படத்தைப் பார்த்தவர்கள் படம் குறித்து என்ன விமர்சனத்தை அளித்துள்ளனர் என்று தற்போது பார்க்களாம்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

முழுக்க முழுக்க அன்பு நிறைந்த, பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோரின் காட்சிகளே இதில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன. வழக்கம் போலவே, பிரதீப்பின் நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரம் வாய்த்துள்ளது. தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அவர் அதில் முத்திரை பதித்துள்ளார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி இடைவேளைக் காட்சியும் உச்சக்கட்டச் சண்டைக் காட்சியுமே இப்படத்தின் சிறப்பம்சங்கள். முதல் பாதியில் யோகி பாபுவும், இரண்டாம் பாதியில் எஸ்.ஜே. சூர்யாவும் ஜொலிக்கிறார்கள்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி சுவாரஸ்யமான கருத்தையும் அமைப்பையும் கொண்ட ஒரு எதிர்கால காதல் நகைச்சுவைப் படம், ஆனால் அதன் உருவாக்கம் ஏமாற்றமளிக்கிறது. இப்படத்தின் முக்கிய பலம் அதன் எதிர்கால உலகப் படைப்புதான். அது சில சமயங்களில் நம்பமுடியாததாகத் தோன்றினாலும், முதல் பாதியில் ஓரளவு வேடிக்கையை உருவாக்குகிறது. இதன் கருத்து சுவாரஸ்யமானது மற்றும் நல்ல சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி 2040 பின்னணி, பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா மோதும் காட்சிகள், கீர்த்தியின் அறிமுகம், யோகி பாபுவின் கலகலப்பான நகைச்சுவை, ஆனந்தராஜின் நறுக்கான வசனங்கள், சமூக ஊடகக் கூறுகள், வண்ணமயமான காட்சிகள், அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள், இவை அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. கதைக்களம் நம்பகத்தன்மை அற்றதாகவும், நீளமாகவும் இருந்தாலும், விக்கியின் சுவாரஸ்யமான கதை சொல்லும் பாணி, இப்படத்தை ஒரு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாக மாற்றுகிறது!

Also Read… LIK Movie: பிரதீப் ரங்கநாதனின் LIK படத்திலிருந்து வெளியானது ‘வைப் வாஸே’ பாடல்!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

சுவாரஸ்யமான கதைக்கரு, நேர்த்தியான படைப்பு, வண்ணமயமான காட்சிகள். அனைவரின் நடிப்பும் அருமை. சீமன் மற்றும் கௌரி தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். ஓரளவு விறுவிறுப்பான திரைக்கதை. அனிருத்தின் மிகச்சிறந்த படைப்பு. பின்னணி இசையும் பாடல்களும் மிகப்பெரிய பலம்.

Also Read… Mamitha Baiju: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட கதையே அப்படிதான்.. முழுக்க ஜாலியான படம் – மமிதா பைஜூ பேச்சு!

Follow Us