AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

LIK Movie: பிரதீப் ரங்கநாதனின் LIK படத்திலிருந்து வெளியானது ‘வைப் வாஸே’ பாடல்!

Vibe Vaasey Video Song: நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வித்தியாசமான கதையில் தயாராகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படம் வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் தற்போது இப்படத்திலிருந்து வைப் வாஸே என்ற புது லிரிக்கல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

LIK Movie: பிரதீப் ரங்கநாதனின் LIK படத்திலிருந்து வெளியானது ‘வைப் வாஸே’ பாடல்!
வைப் வாஸே வீடியோ பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Apr 2026 15:09 PM IST

இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் லீட் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கிரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளர். இப்படமானது பிரதீப் ரங்கநாதனின் 2வது படமாக கடந்த 2024ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இப்படமானது 2040ம் ஆண்டில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அதை தொடர்ந்து படம் வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

அந்த வகையில் இப்படத்திலிருந்து ஏற்கனவே அனிருத்தின் (Anirudh) இசையில், 4 பாடல்கள் வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்தக்க 5வது பாடலாக “வைப் வாஸே” (Vibe Vaasey) என்ற புது லிரிகள் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: மோகன்லால் முதல் டொவினோ தாமஸ் வரை… கேரளா தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபல நடிகர்கள்

LIK திரைப்படத்திலிருந்து வெளியான வைப் வாஸே என்ற லிரிக்கல் வீடியோ பாடல் பதிவு:

இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் வாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி “தீமா” என்ற வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தயாராகிவந்த நிலையில், வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகதயாராகியுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா. சீமான், கௌரி ஜி கிஷன், யோகி பாபு, ஆனந்த ராஜ் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: லோகா படக்குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டார்கள் – நடிகர் மம்முட்டி கலகல பேச்சு

இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், தற்போதுவரை முன்பதிவில் மட்டுமே ரூ 1.5 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் இப்படம் வெளியிடப்படும் என்ற நிலையில், நிச்சயம் பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல படமாக,  ரூ 100 கோடி வசூலை கொடுத்து நான்காவது வெற்றிப்படமாக அமைய வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us