AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லோகா படக்குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டார்கள் – நடிகர் மம்முட்டி கலகல பேச்சு

Actor Mammoottys recent interview viral on social media: மலையாள சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருகிறார் நடிகர் மம்முட்டி. இவர் லோகா படத்தில் எப்படி இணைந்தார் என்பது குறித்து கலகலப்பாக பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

லோகா படக்குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டார்கள் – நடிகர் மம்முட்டி கலகல பேச்சு
மம்முட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Apr 2026 12:23 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தப் படம் மலையாள சினிமாவில் ஒரு புது சாதனைப் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஹீரோ ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்து இருந்தார். இவர்தான் இந்த பாகத்தின் சூப்பர் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் துல்கர் சல்மான் அவரது தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் ஃபிலிம்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். வெறும் ரூபாய் 30 கோடிகள் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் உலக அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி ரூபாய் 300 கோடிகள் வசூலித்து மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத ஒரு சாதனையைப் படைத்தது.

இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உடன் பலர் நடித்து இருந்தனர். மலையாள சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் போதே அடுத்தடுத்து 5 பாகங்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் தான் எப்படி நடிக்க ஒப்பந்தம் ஆனேன் என்பது குறித்து நடிகர் மம்முட்டி வெளிப்படையாக பேசிய இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நான் ஒரு காட்டேரியாக நடிப்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

நான் ஒரு காட்டேரியாக நடிப்பதை பற்றி நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? இது ஒரு ஆச்சரியம்தான். உண்மையில், லோகா சாப்டர் 1 சந்திரா படத்தில், இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு மட்டும் குரல் கொடுக்குமாறுதான் என்னைக் கேட்டிருந்தார்கள். நான் செய்தது அது ஒன்று மட்டும்தான். படத்தில் அவர்கள் பயன்படுத்திய கை என்னுடையது அல்ல. படம் வெளியான பிறகுதான், அது என்னுடைய கைதான் என்று படக்குழுவினர் என்னிடம் கூறினார்கள். இப்போது அதில் நடிப்பது என்னுடைய பொறுப்பாகிவிட்டது. சொல்லப்போனால், அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று கலகலப்பாக மம்முட்டி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நடிகர்களின் பின்னால் சென்று இளைஞர்கள் காயமடைந்தால் அது அவர்களுக்குதான் ஆபத்து – நடிகர் ரஜினிகாந்த்

இணையத்தில் வைரலாகும் மம்முட்டியின் பேச்சு:

Also Read… கர படத்திலிருந்து வெளியானது கண்ணம்மா என் கண்ணம்மா பாடலின் லிரிக்கள் வீடியோ

Follow Us