AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Allu Arjun: அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியாகும் AA22xA6 பட டைட்டில் போஸ்டர் – படக்குழு அறிவிப்பு!

பான் இந்திய திரைப்படமாக தயாராகிவருவதுதான் AA22xA6. இதை அட்லீ இயக்க, அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்துள்ளார். அந்த வகையில் நாளை (08/04/2026) அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை என்ற நிலையில், தற்போது AA22xA6 படத்தின் டைட்டில் ரிலீஸ் சிறப்பான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Allu Arjun: அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியாகும் AA22xA6 பட டைட்டில் போஸ்டர் – படக்குழு அறிவிப்பு!
அல்லு அர்ஜுனின் AA22 படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Apr 2026 11:37 AM IST

டோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக ஜொலிப்பவர் அல்லு அர்ஜுன் (Allu Arjun). இவரின் நடிப்பில் இதுவரை 21 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இறுதியாக வெளியான புஷ்பா 1 மற்றும் 2 (Pushpa Part 1 & 2) போன்ற படங்கள் இவருக்கு கிட்டத்தட்ட ரூ 2000 கோடிகளுக்கு மேல வசூலை கொடுத்து மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக அல்லு அர்ஜுன் இணைந்துள்ள புதிய படம்தான் AA22xA6. இப்படத்தை தமிழ் இயக்குநர் அட்லீ குமார் இயக்க (Atlee Kumar), சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது பிரம்மாண்டமாக தயாரித்துவருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் முன்னணி வேடத்தில் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone) நடித்துவருகிறார். இந்த ஜோடியானது முதல் முறையாக இணைந்து நடிக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் வரும் 2026 ஏப்ரல் 8ம் தேதியில் அல்லு அர்ஜுன் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அந்த வகையில், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு AA22xA6 படத்திலிருந்து டைட்டில் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி

இதையும் படிங்க: தேர்தல் முடியும்வரை.. TN2026 பட ரிலீஸை நிறுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

அல்லு அர்ஜுனின் AA22xA6 திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:

நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் 2026 ஏப்ரல் 8ம் தேதியில் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, AA22xA6 படத்திலிருந்து டைட்டில் போஸ்டர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்த ஹிண்ட்டை ஏற்கனவே அல்லு அர்ஜுனின் மேலாளர்கள் கொடுத்திருந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அதன்படி இப்படத்திற்கு வேர்ல்ட்ஃபயர் என டைட்டில் வைக்க கூடும் என இணையத்தில் ரசிகர்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: விஷ்ணு விஷால் – மமிதா பைஜுவின் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

இப்படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோனுடன் நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாக்கூர் போன்ற பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதாக கூறபடுகிறது. அந்த வகையில் இப்படத்திற்கு தமிழ் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் நிலையில், இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசையின்மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இவரின் இசையமைப்பில் இதுவரை வெறும் 2 படங்கள் மட்டுமே வெளியான நிலையில், இவ்வளவும் பிரம்மாண்ட படத்தில் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us