தேர்தல் முடியும்வரை.. TN2026 பட ரிலீஸை நிறுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
TN2026 Movie Controversy: சினிமாவில் பிரபலமான இயக்குநர் மற்றும் நடிகராக இருந்துவருபவர் நட்டி நடராஜன். இவரின் நடிப்பில் அரசியல் கதைக்களத்துடன் தயாராகியுள்ள படம்தான் TN2026. இது முழுக்க அரசியல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ரிலீஸை நிறுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.
நடிகர் நட்டி நடராஜன் (Natty Natarajan) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்துவருகிறார். அந்த வகையில் இவர் சூர்யா முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) போன்ற நடிகர்களுடனும் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த வரிசையில் இவரே ஹீரோவாக நடித்திருக்கும் அரசியல் கதைக்களம் கொண்ட திரைப்படம்தான் TN2026 : தங்க நட்சத்திரம் (TN 2026: Thanga Natchathiram). இந்த படத்தை தம்பி ராமையாவின் (Thambi Ramaiah) மகன், உமாபதி ராமையா (Umapathy Ramaiah) இயக்கியுள்ளார். இந்த படமானது முழுக்க அரசியல், காமெடி மற்றும் திருப்பங்கள் கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது. 2026ம் ஆண்டு தேர்தல் தேதி (2026 Election) அறிவிக்கப்பட்ட பிறகும், இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்புகள் கிளம்புகிறது.
மேலும் இப்படத்தில் தளபதி விஜய் குறித்து தவறான கருத்துக்கள் பரப்படுவதாகவும், இப்படத்தின் டீசரில் விஜய்யின் கட்சி வாழ்க்கை பற்றி பல்வேறு விஷயங்களும் இடம்பெற்றிருந்ததாக பேசப்பட்டுவந்தது. அந்த வகையில் தற்போது, தேர்தல் முடியும்வரை இப்படத்தின் ரிலீஸை நிறுத்திவைக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: தனுஷின் ‘கர’ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – அப்டேட் இதோ!
நட்டி நடராஜனின் TN 2026 படத்தின் மீது வழக்கு பதிவு:
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், வரும் ஏப்ரல் 23ம் தேதியில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் சம்பந்தமாக எந்த படங்களையும் வெளியிடக்கூடாது என்பது விதி. அந்த வகையில் நட்டி நடராஜன், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ள படம்தான் TN2026. இப்படம் முழுக்க அரசியல் கதைக்களத்தில் அமைந்துள்ள நிலையில், வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: தளபதி விஜயின் அந்தப் படத்தை நிறையமுறை பார்த்து இருக்கேன் – நடிகர் டொவினோ தாமஸ்
அந்த வகையில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடியும் வரை, இப்படத்தின் ரிலீஸை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட விடும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படமானது சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விசாரிக்கப்பட்டு, விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நட்டி நடராஜனின் TN2026 திரைப்படத்தின் டீசர் குறித்த பதிவு:
Indha Varusham Nammadhaan 🔥#TN2026 teaser is out now
Yaar Manadhaiyum Pun Paduthuvadharku Alla🫡
🔗 https://t.co/YmUS5j2JO5#ThangaNatchathiram#TN2026FromApril10
Produced by #KannanRavi @KRGOffl
Co Produced by #DeepakRaviA @umapathyramaiah Film
A @DarbukaSiva Musical pic.twitter.com/0K84XZKWpV
— KANNAN RAVI GROUPS (@KRGOffl) April 2, 2026
இப்படமானது அரசியல், காமெடி போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் நடிகர், சினிமா நாயகனாக இருந்து பின் அரசியலில் நுழைவதுபோன்று காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்படமானது விஜய்யின் அரசியல் வாழ்க்கையை கேலி செய்து எடுக்கப்பட்டதா? அல்லது அவருக்கு ஆதரவான படமா? என பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.