AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆட்சியும் மாறும்… காட்சியும் மாறும்… TN 2026 படத்தின் டீசர் இதோ!

Natty Nataraj Starring TN 2026 Movie Teaser Out Now: நடிகர் நட்டி நடராஜ் நடிப்பில் இயக்குநரும் நடிகருமான உமாப்தி ராமையா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் TN 2026. இந்தப் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஆட்சியும் மாறும்… காட்சியும் மாறும்… TN 2026 படத்தின் டீசர் இதோ!
TN 2026Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Apr 2026 18:17 PM IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த தம்பி ராமையா பிறகு படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த தம்பி ராமையா பிறபு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார். இவரது மகனாக சினிமாவில் அறிமுகம் ஆனவர்தான் உமாபதி ராமையா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அதாகப்பட்டது மகா ஜனங்களே என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து மணியார் குடும்பம், திருமணம் மற்றும் தண்ணி வண்டி ஆகியப் படங்களில் நாயகனாக நடித்தார். இவர் நாயகனாக நடித்தப் படங்கள் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான ராஜாகிளி என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார்.

இந்தப் படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. உமாபதி ராமையா படங்களில் நாயகனாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனதைவிட கடந்த 2021-ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஒரு படத்தை உமாபதி ராமையா எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கண்ணன் ரவி குருப்ஸ் தயாரித்து உள்ளது. அந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

விஜயின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியானது TN 2026 படத்தின் டீசர்:

இந்தப் படத்தின் டீசரைப் பார்க்கும் போது நடிகர் விஜயின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கை வரை அனைத்தையும் படமாக எடுத்துள்ளது தெரிகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் நட்டி நடராஜ் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, யாஷிகா ஆனந்த், சாந்தினி, ரெடின் கிங்ஸ்லி, விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, ஸ்ரீஜா ரவி, தலைவாசல் விஜய், வையாபுரி, சித்ரா லட்சுமணன், ஆதித்ய கதிர், இந்திரஜா சங்கர், மாறன், முத்துக்குமரன், சாண்டி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் வருகின்ற 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கலிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் படத்திலிருந்து வெளியானது டீசர்

TN 2026 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… காக்கி சட்டை – கொடி படங்களில் அப்படி நான் செய்தது தவறு… இயக்குநர் துரை செந்தில் குமார் ஓபன் டாக்

Follow Us