காக்கி சட்டை – கொடி படங்களில் அப்படி நான் செய்தது தவறு… இயக்குநர் துரை செந்தில் குமார் ஓபன் டாக்
Durai SenthilKumar talks about his mistakes in both movies: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் துரை செந்தில் குமார். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டியில் காக்கி சட்டை மற்றும் கொடி படங்களில் செய்த தவறுகளை வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் துரை செந்தில் குமார். இவர் தமிழில் வெளியான எதிர்நீச்சல் என்ற படத்தினை இயக்கியதன் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் லீடர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் லீடர் படம் நாளை 03-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இயக்குநர் துரை செந்தில் குமார் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதிலும் குறிப்பாக அவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான காக்கி சட்டை மற்றும் கொடி ஆகியப் படங்களில் அவர் செய்த தவறுகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காக்கி சட்டை – கொடி படங்களில் அப்படி நான் செய்தது தவறு:
காக்கி சட்டை படத்தின் இரண்டாம் பாதியில் மனோபாலா சாரின் கதாபாத்திரத்தைச் சேர்த்த விதம் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. நான் முதலில் இந்தக் கதையைத் தனுஷ் சாருக்காக எழுதியபோது, அது முற்றிலும் ஒரு தீவிரமான பாணியில் அமைந்திருந்தது. அக்காலகட்டத்தில், ‘VVS’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்ததால், தனுஷ் சாரை இன்னும் அதிக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு பாணியில் சித்தரிக்குமாறு அனைவரும் எனக்குப் பரிந்துரைத்தனர். ஆனால், படம் வெளியாகும் தருவாயில், கதையின் போக்கை மாற்றியமைப்பது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை.
கொடி படத்தின் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி 30 நாட்களுக்குப் பிறகு, படத்தின் இறுதிக்கட்டக் காட்சிகளை (Climax) அமைக்கும் பணியை மேற்கொள்ளலாம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், தனுஷ் சார் என்னுடன் தொடர்ந்து 52 நாட்கள் பணியாற்றினார்; அந்த காலத்திற்குள்ளேயே, இரட்டை வேடக் காட்சிகள் அனைத்தையும் நாங்கள் முழுமையாகப் படம்பிடித்து முடித்துவிட்டோம். அவர் என்னிடம், “செந்தில், நான் இப்போது முழுமையாகக் கிடைக்கக்கூடிய நிலையில் இருக்கிறேன் வாருங்கள், இந்தப் படத்தை முழுமையாக முடித்துவிடுவோம்,” என்று கூறினார்.
இதில் தவறு அவர் தரப்பில் ஏதுமில்லை. படத்தின் கடைசி 20 நிமிடக் காட்சிகளையும், அதன் இறுதிக்கட்டத்தையும் நான் இன்னும் சிறப்பாக எழுதியிருக்க முடியும்; ஆனால், அதற்கான பணியை மேற்கொள்ள எனக்கு இடையில் ஒரு இடைவேளை கிடைக்கும் என்று நான் தவறாகக் கணித்துவிட்டேன் என்று துரை செந்தில் குமார் தெரிவித்து இருந்தார்.
Also Read… இன்வெஸ்டிகேஷன் க்ரைம் வெப் ஸ்டோரி பார்க்கணுமா? கேரள க்ரைம் ஃபைல்ஸை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்
இணையத்தில் வைரலாகும் துரை செந்தில்குமார் பேச்சு:
Director #DuraiSenthilKumar about his mistakes in #KaakiSattai and #Kodi :#KaakiSattai: I’m not satisfied with the inclusion of Manobala sir’s character in the second half. When I originally wrote it for #Dhanush sir, it was completely in serious mode. At that time, VVS was a… pic.twitter.com/jaz7ZOZwzY
— Laxmi Kanth (@iammoviebuff007) April 1, 2026
Also Read… ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்க கூப்பிட்டா போகமாட்டேன் – ஆண்டிரியா ஓபன் டாக்



