AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்வெஸ்டிகேஷன் க்ரைம் வெப் ஸ்டோரி பார்க்கணுமா? கேரள க்ரைம் ஃபைல்ஸை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்

Kerala Crime Files Web Series OTT Update: மலையாள சினிமாவில் உருவாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த இணையதள தொடர் கேரள க்ரைம் ஃபைல்ஸ். இந்த தொடரை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

இன்வெஸ்டிகேஷன் க்ரைம் வெப் ஸ்டோரி பார்க்கணுமா? கேரள க்ரைம் ஃபைல்ஸை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்
கேரள க்ரைம் ஃபைல்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Mar 2026 22:05 PM IST

மலையாள சினிமாவில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இணையதள தொடர் கேரள க்ரைம் ஃபைல்ஸ். இந்த தொடர்ந்து மலையாள சினிமாவில் வெளியாகி இருந்தாலும் அது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதன்படி கடந்த 23-ம் தேதி ஜூன் மாதம் 2023-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியிட்ட்டது. இந்த கேரள க்ரைம் ஃபைல்ஸ் முதல் பாகத்தை இயக்குநர் அஹ்மத் கபீர் இயக்கி இருந்த நிலையில் இதில் நடிகர்கள் அஜு வர்கீஸ், லால், நவாஸ் வல்லிக்குன்னு, சஞ்சு சனிசென், ஜின்ஸ் ஷான், ஸ்ரீஜித் மகாதேவன், அன்சல் பென், அஜி அலோக், அஸ்வதி மனோகர், தேவகி ராஜேந்திரன், ரூத் பி. ஜான், ஹரிசங்கர், ஜீவன் பேபி மேத்யூ, டாக்டர் நிதின்யா அனில், ஸ்டிஜோ செம்மசேரி, பிரபாகுமார், அபின் பால், பிரதீப் ஜோசப், அகில் ராஜ், ரூபேஷ் கே.வி. பிரகேஷ் ராஜ், ஜினு அனில்குமார், மதனன் பாபு, ராஜீவ் தாமஸ், எம்.டி.ராஜ்மோகன், மினி எஸ்.கே., அபிலாஷ் கே. அக்ஷய் டி., அனூப் ராகவன், பொன்னச்சன், வினோத் தாமஸ், ஜோஸ் பிரவீன், பிரேம் பிரகாஷ், பைஜு பாலா, ஃபெபி என பலர் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்த தொடர் நேரடியாக ஜியோ ஹார்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. இந்த தொடரை ஃபர்ஸ் ப்ரிண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ராகுல் ரிஜி நாயர் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. க்ரைம் த்ரில்லர் கதையில் இன்வெஸ்டிகேஷன் பாண்டியில் வெளியான இந்த தொடர் எப்படி இருக்கிறது என்பது குறித்து செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கேரள க்ரைம் ஃபைல்ஸ் இணையதள தொடரின் கதை என்ன?

இந்த தொடரின் தொடக்கத்தில் கேரளாவில் உள்ள ஒரு லார்ட்ஜில் ஒரு பெண் சடலமாக மீட்கப்படுகிறார். அவர் யார் என்று விசாரிக்கும் போது அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பதை தெரிந்துகொள்கிறார்கள் காவல்துறையினர். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுடன் யார் தங்கியிருந்தார் என்று விசாரிக்கும் போது அந்த நபர் லார்ட்ஸில் கொடுத்தது ஒரு போலி விலாசம் என்பது தெரிகிறது.

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் பட ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?

இந்த நிலையில் அந்த நபர் யார் என்பதை தொடர்ந்து விசாரித்து வரும் போது அந்த நபர் குறித்து எந்தவிதமான உண்மையான தகவலும் கிடைக்கமால் இருக்கிறது. இது காவல்துறையினருக்கு பெருத்த சவாலாக அமைத்தது. இந்த வழக்கை காவல்துறையினர் எப்படி இறுதியில் கண்டுபிடித்தார்கள் என்பதே இந்த இணையதள தொடரின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… பிசாசு 2 மற்றும் மனுஷி படங்களின் நிலை என்ன? நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்

Follow Us