AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை – வைரல் போட்டோ குறித்து பேசிய கயடு லோஹர்

Kayadu Lohar Recent Interview Viral On Social Media : தென்னிந்திய சினிமாவில் இளைம் நடிகையாக தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகை கயாடு லோஹர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை – வைரல் போட்டோ குறித்து பேசிய கயடு லோஹர்
கயடு லோஹர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Mar 2026 11:28 AM IST

கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை கயடு லோஹர். இவர் கன்னட சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான முகில்பேட்டை என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான டிராகன் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். ஆனால் இதற்கு முன்னதாக மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களில் நாயகியாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி மொழிகளில் நடிகை கயடு லோஹர் பிசியான நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக அடுத்தடுத்தப் படங்கள் வரிசையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகை கயடு லோஹர் நடிப்பில் மலையாள சினிமாவில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பள்ளிச்சட்டம்பி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில் படக்குழுவினர் தொடர்ந்து பல பேட்டிகளை அளித்து வருகின்றனர். படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் பிசியாக இருந்து வரும் நிலையில் கயடு லோஹர் சமீபத்திய பேட்டியில் தனது வைரல் புகைப்படம் குறித்து பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

கயடு லோஹரின் நியூ லுக் என்று வைரலான புகைப்படம் – நடிகை விளக்கம்:

இந்த நிலையில் நடிகை கயடு லோஹரிடம் சமீபத்திய பேட்டியில் வைரலான புகைப்படம் குறித்து பேசியுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகை கயடு லோஹர் தலை முடியை வெட்டி பாய் கட் செய்து இருந்தது போல இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய நடிகை கயடு லோஹர் ஏன் அப்படி செய்தார்கள் என்று எனக்கு புரியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… லீடர் பட விழாவில் அறந்தாங்கி நிஷாவை கடுமையாக சாடிய விடிவி கணேஷ்!

இணையத்தில் வைரலாகும் கயடு லோஹரின் பேச்சு;

Also Read… இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்த மதராஸி பட தயாரிப்பாளர்!

Follow Us