Suriya: நா அந்த நடிகரின் மிகப்பெரிய ரசிகன்.. கார்த்தி அப்படி இல்லை – சூர்யா சொன்ன விஷயம்!
Suriya Talks About His Favorite: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் தனக்கும், தனது தம்பி கார்த்திக்கும் பிடித்த நடிகர் குறித்து பேசியுள்ளார். மேலும் தனது குணம் குறித்து சூர்யா பேசிய விஷயம் பற்றி விவரமாக பார்க்கலாம்.
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் வசந்த் (Vasanth) இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் (Nerukku Ner) என்ற படத்தின் மூலம் லீட் நாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். தனது முதல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது இவர்கள் இருவருக்குமே சிறந்த வெற்றியை கொடுத்திருந்தது. மேலும் இந்த படத்தின் பாடல்களும் தற்போதுவரையிலும் ரசிக்கப்பட்டுவருகிறது. ஆரம்ப காலகட்டங்களில் தொடர்ந்து தமிழ் இயக்குநர்களின் இயக்கத்தில் படங்களில் நடித்துவந்தார் சூர்யா. பின் தெலுங்கு இயக்குநர்களின் இயக்கத்தில் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த விதத்தில் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் நடித்துள்ள படம்தான் விஸ்வாந் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons).
இதை தொடர்ந்து மலையாளத்திலும் சூர்யா47 என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து மற்ற மொழி இயக்குநர்களின் இயக்கத்திலும் படங்களில் நடிப்பதற்கு சூர்யா விரும்பிவருகிறார். அந்த விதத்தில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சூர்யா, தனக்கு பிடித்த நடிகர் மற்றும் தனது குணம் குறித்தும் பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக சூரி வாங்கும் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்
தனக்கு பிடித்த நடிகர் மற்றும் தனது குணம் குறித்து சூர்யா சொன்ன விஷயம்:
முன்னதாக நேர்காணல் ஒன்றில் சூர்யா பேசுகையில், “நான் சிறுவயதிலிருந்தே நடிகர் கமல்ஹாசன் சாரின் தீவிர ரசிகன். அவரின் ரசிகன் என்றா, அவரின் நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதுபோல கார்த்திக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ரொம்பவே பிடிக்கும். கார்த்தி என்னை மாதிரி கிடையாது. அவர் திரைப்படங்கள் அதிகம் பார்ப்பவர்.
இதையும் படிங்க: காமெடி ட்ராமா பாணியில் ஒரு தமிழ் வெப் சீரிஸ் பார்க்கனுமா? இந்த லோக்கல் டைம்ஸ் சீரிஸை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!
நான் அப்படி இல்லை, குறைவாகத்தான் படங்கள் பார்ப்பேன். மேலும் நான் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுப்பதற்கே கூச்சப்படுவேன். சிறுவதில் நான் ரொம்பவே தனிமையை விரும்புவேன். கார்த்தி மாதிரி பெரிதாக யாரிடமும் பேச்சு கொடுக்கமாட்டேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
தனது கருப்பு திரைப்படம் குறித்து சூர்யா வெளியிட்ட பதிவு:
Introducing the devil’s advocate ‘Baby Kannan’ @RJ_Balaji from the world of Karuppu.
Thank you @SilambarasanTR_ for singing this special song for us!
‘நாங்க நாலு பேரு’ from #Karuppu is here !!! https://t.co/AJX3ZwwUIX
A @SaiAbhyankkar Banger
With #AsalKolaar lyrics & rap… pic.twitter.com/BQxQOWdAdf— Suriya Sivakumar (@Suriya_offl) March 23, 2026
நடிகர் சூர்யாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்கள் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் கருப்பு படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற திரைப்படமும் தயாராகிவிட்டது. இப்படமானது வரும் 2026 ஜூலை மாதத்தில் வெளியாகிறது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.