Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
Simbu Weight lose Struggle: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் லிஸ்டில் இருந்துவருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில், முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில், எடையை கூட்ட சொன்னதால் அந்த படத்தில் நடிக்க ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை என சொன்ன படம் பற்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் (Silambarasan) தமிழ் சினிமாவில் தனது சிறுவயதிலிருந்தே படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 48 படங்கள் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக இவர் பல படங்களில் நடித்து 90ஸ் காலத்திலே மக்களுக்கு மிகவும் நெருக்கமானார். இவர் தனது தந்தையின் இயக்கத்தில் வெளியான “காதல் அழிவதில்லை” (Kadhal Azhivathillai) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 2002ம் ஆண்டில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. அந்த விதத்தில் ஆண்டிற்கு 3 முதல் 4 படங்கள் வரை இவர் நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமாவில் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளை கடந்தும் கதாநாயகனாகவே படங்களில் நடித்துவருகிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என கூறலாம். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக தக் லைஃப் (Thug Life) என்ற படமானது வெளியாகியிருந்தது.
இதில் கமல்ஹாசனுடன் சிலம்பரசன் நடித்திருந்த நிலையில், அவருக்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்திருந்தது. இதையடுத்து தற்போது அரசன் படத்தில் நாயகனாக நடித்தவருகிறார். அந்த வகையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிம்பு, பத்து தல (Pathu Thala) படத்தில் ஆரம்பத்தில் நடிக்கமாட்டேன் என சொன்னதற்கு காரணத்தை தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: என்னிடம் விஜய் சாருக்காகவே ஸ்பெஷல் கதை இருக்கு.. ஆனால் – அஷ்வத் மாரிமுத்து ஓபன் டாக்!
பத்து தல படத்தில் ஆரம்பத்தில் நடிக்க மறுத்தது குறித்து சிலம்பரசன் பேச்சு:
அந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, “நான் உடல் எடையை குறைத்து, மாநாடு படத்தில் நடித்து ஹிட் கொடுத்தேன். அதையடுத்து பத்து தல படத்தில் நடிக்க கேட்டிருந்தார்கள். அந்த படத்தில் நடிப்பதற்கு எடையை கூட்ட வேண்டும் என சொன்னார்கள். நான் நினைத்தால் வேண்டாம் என சொல்லியிருக்கலாம். பணத்தையும் திரும்ப கொடுத்திருக்கலாம். ஆனால் கௌதம்காக நடிக்கணும்-னு நெனச்சேன். இயக்குநர் கிருஷ்ணாவும், என்னை எடை அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என சொன்னார். நான் உடனே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா, இப்போதுதான் எடையை குறைத்து, டிரான்ஸ்பரமேஷன் பண்ணிருக்கே, மீண்டும் எடையை கூடவேண்டுமா என நினைத்தேன்.
இதையும் படிங்க: நானி சார் எழுப்பும் சுவரில் ஒரு செங்கலாக இருக்க விரும்புகிறேன் – கென் கருணாஸ்
உடனே நான் இயக்குநரிடம், என்னால் மறுபடியும் எடையை கூட்ட முடியாது, நீங்க ஓரு போட்டோஷூட் எடுங்க அதற்கு பின் பார்க்கலாம் என சொன்னேன். பின், நான் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதுபோல போட்டோ எடுத்தோம். அதைப் பார்க்க நன் மிகவும் ஒல்லியாக தெரிந்தேன். உடனேதான், இயக்குநரிடம் நான் இப்படத்தில் நடிக்கிறேன் என கூறி மீண்டும் எடையை கூட்டினேன்” என கூறியிருந்தார்.
சிலம்பரசனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகர் சிலம்பரசன், தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் அரசன் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்த படமானது வட சென்னை பட டைம் லைன் கதையில் தயாராகிவருகிறது. இப்படத்தை 2026 மே மாதத்துடன் முடித்துவிட்டு, தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.