AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிலம்பரசனின் STR51 படத்தின் டைட்டில் இதுவா? படத்தின் ஷூட்டிங் எப்போது தொடக்கம் தெரியுமா?

STR51 Movie Title Update: நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் தற்போது அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங்காகந்து விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்தை அடுத்ததாக இவர், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் கூட்டணியில் புது படத்தில் இணைகிறார். தற்போது இப்படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிலம்பரசனின் STR51 படத்தின் டைட்டில் இதுவா? படத்தின் ஷூட்டிங் எப்போது தொடக்கம் தெரியுமா?
STR51 திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Mar 2026 13:31 PM IST

கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன் (Silambarasan). இவர் தொடர்ந்து சினிமாவில் புது புது திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தக் லைப் (Thug Life) என்ற படமானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியான நிலையில், அதையடுத்து வெற்றிமாறனின் (Vetrimaaran)இயக்கத்தில் அரசன் (Arasan) என்ற படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு முன் தேசிய விருது பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் படம் நடிப்பதாக இருந்த நிலையில், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்துதான் அரசன் படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் 2வது கட்ட ஷூட்டிங் பணிகள் சென்னையில் நடைபெற்றுவருகிறது. இந்த படத்தில் சிலம்பரசன் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தை அடுத்ததாக உடனடியாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கத்தில், STR51 என்ற திரைப்படத்தில் சிலம்பரசன் இணைகிறார்.

இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்திலே அறிவிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கு பின் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிலம்பரசன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து கூட்டணி படத்திற்கு “பாரடைஸ்” (Paradise) என டைட்டில் வைக்கப்படவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: இனி ஹீரோ மட்டும் கிடையாது.. அஜித் குமாரின் புதிய அவதாரம்.. என்னனு தெரியுமா?

சிலம்பரசனின் STR51 திரைப்படத்தின் டைட்டில் தொடர்பாக இணையத்தில் வைரலாகும் பதிவு:

சிலம்பரசன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து கூட்டணி படத்தின் ஷூட்டிங் எப்போது:

சிலம்பரசன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகவுள்ள STR51 திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயிமென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம்தான் டிராகன் படத்தையும் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இதற்கு டிரெண்டிங் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த அஷ்வத் மாரிமுத்து, இப்படத்தில் பல நடிகைகள் நடிப்பதாக அப்டேட் கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: திடீரென தனியாக மும்பை செல்லும் விஜய் – இதுதான் காரணமா?

மேலும் இதன் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் இறுதி அல்லது மே மாத ஆரம்பத்தில் தொடங்கும் என தெரிவித்திருந்தார். மேலும் இதில் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். இன்னும் இது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இப்படம் குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us