AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசன் படத்தில் ஆண்ட்ரியாவின் கதாப்பாத்திரம் இதுவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Andrea Character in Arasan movie | தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் அரசன். இந்தப் படத்தில் வட சென்னை பட நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அரசன் படத்தில் ஆண்ட்ரியாவின் கதாப்பாத்திரம் இதுவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ஆண்ட்ரியாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jul 2026 18:57 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. இவர் தொடர்ந்து படங்களில் நாயகியாக நடிப்பது மட்டும் இன்றி அவ்வபோது படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தொடர்ந்து நாயகன்களுக்கு ஜோடியாக மட்டும் இன்றி படங்களில் கதையின் நாயகியாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா தேர்வு செய்து நடிக்கும் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவர் வட சென்னை படத்தில் நடித்த சந்திரா என்ற கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அரசன் படத்தில் வட சென்னை பட நடிகர்கள் நடிப்பதாக வெளியான தகவல்கள் இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வந்தது. மேலும் தனுஷ் தவிர்த்து மற்ற நடிகர்கள் அரசன் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது.

அரசன் படத்தில் ஆண்ட்ரியாவின் கதாப்பாத்திரம் இதுவா?

அரசன் திரைப்படத்தில் ஆண்ட்ரியாவின் மகனாக சிலம்பரசன் டிஆர் நடிக்கவுள்ளார். இதில், எஸ்டிஆர் சிறுவனாக இருக்கும் காலகட்டத்தைச் சார்ந்த ஆண்ட்ரியாவின் காட்சிகள் இடம்பெறும்/ பின்னர் அவர் வளர்ந்து ஒரு கேங்ஸ்டராக (gangster) மாறுவார். ஆண்ட்ரியாவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, ‘வடசென்னை’ மற்றும் ‘அரசன்’ ஆகிய படங்களுக்கு இடையே ஒரு சுவாரஸ்யமான தொடர்பை வெற்றிமாறன் உருவாக்கி வருகிறார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.

Also Read… கருப்பு படத்தின் வெற்றி… சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூர்யா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஒருபோதும் என் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டேன் – நடிகர் மாதவன்

Follow Us