AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா – தனுஷ் ரசிகர்களுக்கு அவர்களின் பிறந்த நாளில் காத்திருக்கும் ட்ரீட்… வைரலாகும் தகவல்

Actors Suriya and Dhanush birthday special updates viral on social media | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷின் பிறந்த நாளில் வெளியாக உள்ள அப்டேட்கள் என்ன என்று தற்போது பார்க்கலாம்.

சூர்யா – தனுஷ் ரசிகர்களுக்கு அவர்களின் பிறந்த நாளில் காத்திருக்கும் ட்ரீட்… வைரலாகும் தகவல்
சூர்யா - தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jul 2026 12:00 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் தனுஷ். இவர்களின் நடிப்பில் சினிமாவில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் வெளியான படங்கள் கர மற்றும் கருப்பு. நடிகர் தனுஷின் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் கர படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த மே மாதம் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. இவர்களின் நடிப்பில் வெளியான இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான கருப்பு படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. மேலும் அந்த படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்த இரண்டு நடிகர்களும் இந்த ஜூலை மாதம் தங்களது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அவர்களின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்களை தற்போது பார்க்கலாம்.

சூர்யா – தனுஷ் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்:

அதன்படி நடிகர் சூர்யாவின் பிறந்த நாளில் அவரது நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இருந்து அவரே பாடியுள்ள இரண்டாவது பாடல், அவரது பிறந்தநாள் சிறப்பு வெளியீடாக வரவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்பாடலுக்கு கென் கர்ணாஸ் வரிகள் எழுதியுள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அதே போல நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் படத்தின் முதல் பாடலான, ஒரு கொண்டாட்டமான நடனப் பாடல் தனுஷின் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது. சாய் அபியங்கரின் இசையில், தனுஷின் அதிரடியான நடனத்தை இதில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இதுதான் மாஸ்… இதுதான் க்ளாஸ்… வெளியானது பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் முதல் படத்தின் லான்சிங் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கங்குவா படத்தின் தோல்வி… இயக்குநர் சிறுத்தை சிவா செய்த செயல்… புகழ்ந்து பேசிய தயாரிப்பாளர்

Follow Us