AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Nayanthara: அந்த ரெண்டு படமும் ஒரே நேரத்தில் நடிச்சேன் – நயன்தாரா சொன்ன விஷயம்!

Nayanthara Simultaneous Shoots: தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் நயன்தாரா. இவர் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய நிலையில், இருவேறு கதைக்களம் கொண்ட படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவந்த அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார்.

Nayanthara: அந்த ரெண்டு படமும் ஒரே நேரத்தில் நடிச்சேன் – நயன்தாரா சொன்ன விஷயம்!
நயன்தாரா Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 04 Jul 2026 08:19 AM IST

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்துவருபவர் நயன்தாரா (Nayanthara). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) வரை பல்வேறு உச்ச நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கும் மேலாகவே சினிமாவில் கதாநாயகியாகவே நடித்து அசத்தியிருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படம் அன்னபூரணி (Annapoorani). கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்தது. இப்படத்திற்கு பின் இவரின் நடிப்பில் எந்த படங்களும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

அதனை 3 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம்தான் டாக்ஸிக். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது. அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய நயன்தாரா, பில்லா மற்றும் யாரடி நீ மோகினி என இரு படங்களில் ஒன்றாக நடித்த அனுபவம் பற்றி தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பிளாஸ்ட் பட ஆக்ஷன் காட்சியில் நடிக்கும்போது அந்த நடிகரை இன்ஸ்பிரேஷனாக நினைத்தேன் – பிரீத்தி முகுந்தன்!

பில்லா மற்றும் யாரடி நீ மோகினி படத்தில் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நயன்தாரா பேசிய விஷயம்:

அந்த நேர்காணலில் பேசிய நயன்தாரா, “நான் யாரடி நீ மோகினி மற்றும் பில்லா என இரு படங்களில் ஒரே நேரத்தில் நடித்திருந்தேன். முதல் 10 நாட்களில் யாரடி நீ மோகினி படத்தின் நடித்திருந்தேன் என்றால், அடுத்த 15 நாட்களில் பில்லா படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து நடித்திருந்தேன்.

இதையும் படிங்க: வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைக்கும் நூறு சாமி படம் – மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படக்குழு

யாரடி நீ மோகினி படத்தில், நான் அப்படியே அமைதியாக இருக்கும் பெண்ணாக இருப்பேன். அதேபோல பில்லா படத்தில் அப்படியே எனது கேரக்டர் வேற. அவ்வாறு நான் தொடர்ந்து அந்த படங்களில் நடித்தேன். அந்த இரு படங்களும் எனக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது” என அதில் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

நடிகை நயன்தாரா பகிர்ந்திருந்த இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

நயன்தாரா நடித்துவரும் புது படங்கள் :

யாஷ் ஹீரோவாக நடிக்க, நயன்தாரா முக்கியமான வேடத்தில் நடித்துள்ள புது படம் டாக்ஸிக். இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் கிட்டத்தட்ட 5 படங்களுக்கும் மேல் தயாராகிவருகிறது. கவினுக்கு ஜோடியாக ஹாய் என்ற படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2, மண்ணாங்கட்டி, ராக்காயி மற்றும் சல்மான்கானுக்கு ஜோடியாக புதிய படத்திலும் நடித்துவருகிறார்.

Follow Us