AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Nayanthara: தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நயன்தாரா – ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் பதிவு!

Nayanthara Family Vacation: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் தற்போது தனது படங்களில்ன் ஷூட்டிங்கை முடித்த நிலையில், குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிட்டுவருகிறார். ரோமில் உள்ள தனியார் விடுதியில் தனது கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

Nayanthara: தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நயன்தாரா – ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் பதிவு!
நயன்தாரா குடும்பம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 May 2026 17:33 PM IST

சவுத் இந்திய சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட நடிகர்களுடன் படங்களில் நடித்து ஹிட் கொடுத்துவருபவர் நயன்தாரா (Nayanthara). இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை என்ற நிலையில், தொடர்ந்து படங்களில் நடிக்கிறாரா. கடந்த 2 ஆண்டுகளாக இவரின் நடிப்பில் திரையரங்குகளில் எந்த படங்களும் வெளியாகவில்லை. அந்த விதத்தில் இந்த 2026ம் ஆண்டில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் ஹாய் (Hi). இதில் நடிகர் கவினுடன் (Kavin) ஜோடியாக நடித்துள்ளார். இந்த படமானது 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் தயாராகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi amman 2) படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது அவரின் படங்களின் ஷூட்டிங்கை முடித்த நிலையில், தனது குடும்பத்துடன் விடுமுறையை கழித்துவருகிறார்.

அர்ஜண்டீனாவில் உள்ள வில்லா எலேனா (Villa Elena in Argentina) என்ற இடத்தில், நயன்தாரா தனது விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயந்தாரா பகிர்ந்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிவருகிறது.

இதையும் படிங்க: விவாகரத்து கிடைக்கும் வரை படம் நடிக்க மாட்டேன் – ரவி மோகன் பரபர பேட்டி

நடிகை நயன்தாரா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

நடிகை நயன்தாராவின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள பிக் பட்ஜெட் திரைப்படம் டாக்ஸிக். இந்த படத்தில் கன்னட நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், ஜூன் மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. அந்த வகையில் மீண்டும் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இவர், தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் உருவாகிவரும் புது படத்தில் ஆக்ஷன் நாயகியாகவும் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் சார் எனது நெருங்கிய நண்பர்.. நடிகை மாளவிகா மோகனன் பேச்சு!

இதையடுத்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி மொழியில், சல்மான்கானுக்கு ஜோடியாகவும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தளபதி விஜய்யின் வாரிசு பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கிவருகிறார். இப்படமானது பேமிலி பேக்ரவுண்ட் கதைக்களத்தில் தயாராகும் ஆக்ஷன் படமாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தனக்கு கிடைத்த விடுமுறையை தனது குடும்பத்துடன் செலவளித்துவருகிறார் நடிகை நயன்தாரா. இது தொடர்பான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Follow Us