அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் AA23 பட ஷூட்டிங் பூஜை எப்போது?
AA23 Movie Shooting Update: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இயக்குனராக இருந்து, தற்போது சினிமாவில் நடிகராகவும் நுழைந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அல்லு அர்ஜுனின் AA23 படத்தின் இயக்குனராக பணியாற்றிவரும் நிலையில், இதன் ஷூட்டிங் பூஜைகள் மற்றும் ஷூட்டிங் எப்போது என விவரமாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் வெளியான இந்த முதல் படம் அவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதற்க்கு பின் கார்த்தியின் கைதி (Kaithi) படத்தின் மூலம் ரசிகர்கள் ,மத்தியில் பிரபலமானார். இந்த படம் இவருக்கு வெற்றியை கொடுத்த முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) வரை பல்வேறு நடிகைகளின் படங்களை இயக்கியுள்ளார். கூலி படத்திற்கு பின் தற்போது டிசி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இதை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரித்திருந்தது.
மேலும் தற்போது இவர் அல்லு அர்ஜுனின் (Allu Arjun) AA23 படத்தின் இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். இதன் ஷூட்டிங் பூஜைகள் மற்றும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என தகவல்கள் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க : நடிகராக எனது தந்தையின் அந்த படங்கள் எனக்கு ஊக்கமளிக்கும் – துருவ் விக்ரம் ஓபன் டாக்
AA23 படத்தின் ஷூட்டிங் பூஜை குறித்து அப்டேட் :
இயக்குனர் லோகேஹ்ஸ் கனகராஜ் டிசி படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுனின் AA23 படத்தில் பிசியாக இருந்துவருகிறார். இதன் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில்., இதன் இசையமைப்பு பணிகளில் அனிருத்தும் ஈடுபட்டுவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் விரைவில் நடக்கும் என் அகோரப்படும் நிலையில், ஷூட்டிங் 2026ம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
AA23 திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை குறித்து வைரலாகும் பதிவு:
Directed by #LokeshKanagaraj, #AlluArjun’s #AA23 is set to begin shooting in November. The film’s Pooja ceremony is expected to take place very soon.#Anirudh will be composing the music for the film. pic.twitter.com/uSWWU6Nduz
— Movie Tamil (@_MovieTamil) August 18, 2026
ட்ரோல்கள் மற்றும் மீம்ஸ் குறித்து மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்:
ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ், “என் அம்மாவே எனக்கு அவற்றை அனுப்புகிறார் டா.. இதில் பதட்டப்பட என்ன இருக்கிறது..? எங்கள் வேலை நன்றாக இருந்தால், அவர்கள் எங்களைக் கொண்டாடுவார்கள். ஆனால் ஏதாவது தவறு இருந்தால், நாங்கள் ட்ரோல் ஆகிவிடுவோம்.
இதையும் படிங்க: 6வது இண்டீ பாடல்.. சூப்பர் அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!
எனது முந்தைய இரண்டு படங்களும் அப்படித்தான் அமைந்தன, அதனால் இப்போது அவர்கள் நிறைய பதிவிடுகிறார்கள். நான் அல்லு அர்ஜுனுடன் ஒரு படத்தில் பணியாற்றுகிறேன், அதன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அது வெளியானதும், இந்த ட்ரோல்கள் தானாகவே நின்றுவிடும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.