AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Picasso: அபிஷன் ஜீவிந்த் குரலில்.. பிக்காசோ படத்தின் ‘ஹக்குனாமட்டாடா’ பாடல் வெளியீடு!

Hakunamatata Song: தமிழில் மக்கள் மத்தியில் பேமஸான ஹீரோ மற்றும் இயக்குநராக இருந்துவருபவர் அபிஷன் ஜீவிந்த். இவரின் நடிப்பில் தமிழில் 2வது உருவாகியுள்ள படம்தான் பிக்காசோ. இப்படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துவரும் நிலையில், தற்போது இப்படத்திலிருந்து முதல் பாடலான ஹக்குனாமட்டாடா பாடல் வெளியாகியுள்ளது. இதை நடிகர் சூரி பகிர்ந்துள்ளார்.

Picasso: அபிஷன் ஜீவிந்த் குரலில்.. பிக்காசோ படத்தின் ‘ஹக்குனாமட்டாடா’ பாடல் வெளியீடு!
ஹகுனாமட்டாடா வீடியோ பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Nov 2026 17:36 PM IST

2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family Movie) என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக சினிமாவில் நுழைந்தவர் அபிஷன் ஜீவிந்த். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படமானது இவருக்கு இயக்குநராக பெரிய அங்கீகராத்தை கொடுத்தது. இந்த படத்தில் இவர் சிறிய வேடத்தில் நடித்திருந்த நிலையில், அவரின் வேடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் வித் லவ் (With Love Movie) என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக நுழைந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகு இவர் 2வது முறையாக ஹீரோவாக நடித்துவந்த திரைப்படம்தான் பிக்காசோ (Picasso Movie). இதை இயக்குநர் கௌதம் சிவராமன் (Gowtham Sivaraman) இயக்க, டிராமா கம்பெனி என்ற புது தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது.

இந்த படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்க, கன்னட நடிகர் சிவராஜ்குமார் (Shivaraj Kumar) முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள நிலையில், ஹக்குனாமட்டாடா என்ற முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதை நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெய் – பிரியங்கா மோகன் நடிக்கும் ஏஜிஎஸ்29 பட ஷூட்டிங் ஓவர் – படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு!

அபிஷன் ஜீவிந்தின் பிக்காசோ பட முதல் பாடலை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் சூரி:


சினிமாவில் இயக்குனராக நுழைந்த அபிஷன் ஜீவிந்த், வித் லவ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன் பிறகு தனது நடிப்பில் 2வது உருவாக்கிவந்த படம்தான் பிக்காசோ. இந்த படத்தில் தற்போது இவர் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். இந்த ஹக்குனாமட்டாடா என்ற போராடலை தனது குரலில் அபிஷன் ஜீவிந்த் பாடியுள்ளார். சினிமாவில் தற்போது இயக்குநர், ஹீரோ மற்றும் பாடகர் என பல பணிகளை செய்யும் ஆர்வத்தில் அபிஷன் ஜீவிந்த் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷன் ஜீவிந்தின் பிக்காசோ படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த பிக்காசோ படத்தில் அபிஷன் ஹீரோவாக நடிக்க, கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவரின் தந்தையாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் டூரிஸ்ட் பேமிலி பட நடிகை யோகலட்சுமி மற்றும் நடிகை ஷிவானி நகரம் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: அதை நாகரீகமாக புரிந்துகொள்ள இங்க யாருமில்ல.. அரசியல் குறித்து பேசிய விஜய் சேதுபதி!

இந்த படமானது தந்தை மகன் எமோஷனல் மற்றும் காதல் கதைக்களத்தை மையமாக கொண்ட கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதன் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், 2026ம் ஆண்டு டிசம்பர் இறுதி அல்லது 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us