Abishan Jeevinth: அபிஷன் ஜீவிந்த் மற்றும் சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா? – அறிவிப்பு இதோ!
Abishan jeevinth New Movie Title: தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது ஹீரோவாக நடித்துவருபவர் அபிஷன் ஜீவிந்த். இவருடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இன்று (07/09/2026) இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநராகவும்,நடிகராகவும் இருந்துவருபவர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth). இவரின் நடிப்பில் தமிழில் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) மற்றும் வித் லவ் (With Love) போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வித் லவ். இதை அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் வெளியானது. இதில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பின் மேலும் புது படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் (Gowtham Sivaraman) இயக்க, டிராமா கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.
இதில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் சிவராஜ்குமார் (Shiva Rajkumar) இணைந்து இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அப்பா மற்றும் மகனுக்கு இடையே உள்ள பாசம் குறித்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (07/09/2026) இப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் கன்னட மொழியில் நடிகர் ரிஷப் ஷெட்டி பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: மணிரத்தினம் இயக்கத்தில்.. விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் படத்தின் டைட்டில் இதுவா?
அபிஷன் ஜீவிந்த் மற்றும் சிவராஜ்குமாரின் கூட்டணி பட டைட்டில்:
இந்த படத்தில் அபிஷன் ஜீவிந்த் மகனாகவும், சிவராஜ்குமார் தந்தையாகவும் நடித்துள்ளார். மேலும் இதில் டூரிஸ்ட் பேமிலி பட நடிகை யோகலட்சுமி மற்றும் ஷிவானி நகரம் போன்ற நடிகைகள் இணைந்து முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் பிக் பாஸ் புகழ் கானா வினோத்தும் இதில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இப்படத்திற்கு படக்குழு பிக்காசோ என டைட்டில் வைத்துள்ளது. தற்போது வெளியான இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியான இயக்குநர் இளனின் பியார் பிரேமா கல்யாணம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
அபிஷன் ஜீவிந்தின் பிக்காசோ படத்தின் டைட்டில் போஸ்டர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The name is #Picasso!
“Karunada Chakravarthy” Dr. Shivarajkumar’s new avatar with young sensation Abishan Jeevinth.
Our heartfelt thanks to @shetty_rishab sir for unveiling the first look and turning the occasion into a truly grand celebration 🔥❤️✨#Picasso
Starring… pic.twitter.com/QSJWNQU5G4— Drama Company (@dramacompany) September 7, 2026
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துவரும் நிலையில், இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படத்தின் பின்னணி பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.