அந்த ஹீரோக்களுடன் படம் பண்ண முயற்சி பண்ணேன் – பி.எஸ்.மித்ரன் ஓபன் டாக்!
PS Mithran interview: கோலிவுட் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் பி.எஸ்.மித்ரன். இவரின் இயக்கத்தில் தமிழில் சர்தார் 2 படமானது வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த பி.எஸ்.மித்ரன், தான் படம் செய்ய முயற்சித்த நடிகர்கள் யார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran). இவர் நடிகர் விஷாலின் (Vishal) இரும்புத்திரை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் வெளியாகியிருந்த இப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை (Sivakarthikeyan) வைத்து ஹீரோ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படமானது வித்தியாசமான கதையில் வெளியான நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இது அவருக்கு மாபெரும் தோல்வி திரைப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், பல மாதங்களுக்கு பிறகே படத்தை இயக்கியிருந்தார், அந்த திரைப்படம்தான் சர்தார் (Sardar). நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் 2022ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. ஹீரோ படம் பிளாப்பான நிலையில், சர்தார் இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்தது.
மேலும் இந்த படத்தின் தொடர்ச்சியாக சர்தார் 2 (Sardar 2) படமானது 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கலந்துகொண்டிருந்தார், அதில் பேசிய அவர் தான் படம் பண்ண முயற்சித்து பின், இணையாமல்போன நடிகர்கள் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: கிளாடியேட்டர்ஸ் தீபாவளிகா? அஜித்தின் ஆவணப்படம் ரிலீஸ் அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா!
கதை சொல்லி, இயக்க நினைத்த நடிகர்கள் லிஸ்ட் குறித்து பகிர்ந்த பி.எஸ்.மித்ரன்:
அந்த நேர்காணலில் பேசிய பி.எஸ்.மித்ரன், “நான் சிரஞ்சீவி சாருடன் படம் பண்ணுவதாக இருந்தது, அது நடக்கவில்லை. யாஷ் சாருடன் படம் பண்ணுவதாக இருந்தது, அது டைம் பிரச்சனையின் காரணமாக நடக்கவில்லை. இதெல்லாம் சர்தார் 1 படத்திற்கு பின் நான் சொன்ன நடிகர்கள். மேலும் இரும்புத்திரை படத்திற்கு பிறகு, சூர்யா சாருக்கும் கதை ஒன்று சொல்லியிருந்தேன்.
இதையும் படிங்க: காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் போவது இவர்கள்தானா?
மேலும் தற்போது தனுஷ் சாருக்கும் கதை சொல்லியிருக்கிறேன், இதை பாலிவுட் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாரி தயாரிக்கிறார். இது இன்னும் உறுதியகாகவில்லை. மேலும் 2021ம் ஆண்டிற்கு முன், அண்ணாத்த படம் ரிலீஸாவதுக்கு முன்பே ரஜினி சாருக்கும் கதையை சொல்லியிருந்தேன். அதுவும் நடக்கவில்லை” என தான் கதை சொல்லி நடக்காமல் போன விஷயம் குறித்து அதில் அவர் கூறியிருந்தார்.
சர்தார் 2 படம் குறித்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Sep10 Varrom! ☄️💥🔥#Sardar2 pic.twitter.com/T4AC14Ab0b
— PS Mithran (@Psmithran) September 3, 2026
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் சர்தார் 2. இதில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர். இப்படமானது சிறப்பான ஆக்ஷன் மற்றும் மாஃபியா கதையில் உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.