மண்டாட்டி படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்றது ரெட் ஜெயண்ட் மூவிஸ்
Mandaadi Movie theatrical rights | நடிகர் சூரி நடிப்பில் அதிக பொருட் செலவில் தற்போது உருவாகி உள்ள படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூரி. இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் படங்களில் நடித்து வந்தார். இவர் காமெடி நடிகராக நடித்து வந்த போதே தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூரி நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான மாமன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி தற்போது நாயகனாக நடித்து உள்ள படம் மண்டாட்டி. கடலோரத்தில் வாழும் மீனவ மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் சூரி ஒரு மீனவராக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




மண்டாட்டி படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றது ரெட் ஜெயண்ட் மூவிஸ்:
அதன்படி நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகி உள்ள மண்டாட்டி படம் வருகின்ற 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது தமிழ் நாட்டில் இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிடும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
Also Read… இயக்குநர் ரவி மோகனின் அன் ஆர்டினரி மேன் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் இதோ
மண்டாட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
We are proud to announce that the Tamil Nadu theatrical rights of #Mandaadi have been bagged by @RedGiantMovies_! 💥
#Mandaadi in cinemas worldwide on September 10, 2026. 🎬🔥
@sooriofficial #Suhas #Sathyaraj @Mahima_Nambiar @RavindraVijay1 @MithunJS5 @bala_actor… pic.twitter.com/sLFUzxONMg— Red Giant Movies (@RedGiantMovies_) September 6, 2026
Also Read… காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் போவது இவர்கள்தானா?