AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Weather Update: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. 25 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை – வானிலை ரிப்போர்ட்

Tamil Nadu Rains: இன்று (அக். 23) கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

Weather Update: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. 25 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை – வானிலை ரிப்போர்ட்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Oct 2026 06:25 AM IST

அக்டோபர் 23,2026: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்றால், அதற்கு ‘முரசு’ எனப் பெயரிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று குமரிக்கடல், தென் தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கேரளப் பகுதிகளில் நிலவியது. இதற்கிடையே, வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு ஆர்ஞ்சு அலர்ட்:

இன்று (அக். 23) கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு.. ஆளுநரிடம் அனுமதி கோரிய அதிமுக.. பின்னணி என்ன?

அக்டோபர் 24 முதல் 26 வரை கனமழை:

அக்டோபர் 24ஆம் தேதி திருநெல்வேலி மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கனமுதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 25ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி மாவட்டங்களிலும், அக்டோபர் 26ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமுதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: புழல் சிறையில் அடுத்தடுத்து கைதி தப்பிய விவகாரம்.. உதவி ஜெயிலர்-7 வார்டன்கள் சஸ்பெண்ட்.. சிறைத்துறை டிஜிபி உத்தரவு!

அக்டோபர் 27, 28ஆம் தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை:

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31–32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25–26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 22 முதல் 26ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்றும், வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us