காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் போவது இவர்கள்தானா?
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காமென் மேன்களாக போட்டியிட்டு தற்போது மூன்று பேரி இறுதியாக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிற்குள் செல்ல தேர்வாகி உள்ளனர். அவர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு சீசன்களிலும் பொது மக்களில் இருந்து மக்களிடையே பிரபலம் இல்லாத நபரை நிகழ்ச்சி குழுவே தேர்வு செய்து அனுப்பி வந்தனர். மேலும் ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதுப் புது விசயங்களை நிகழ்ச்சி குழு சேர்த்து வந்தது. மேலும் முன்பு இருந்த சீசனைப் பார்த்து அதே மாதிரி விளையாடி மக்களிடையே வரவேற்பைப் பெறலாம் என்று நினைப்பவர்களுக்கு சற்று சர்ப்ரைஸாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் முன்பு பிக்பாஸ் தமிழில் 9 சீசன்களாக இல்லாத பல சர்ப்ரைஸ்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று தான் காமென் மேன்களும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தது.
அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு கடந்த மாதம் பிக்பாஸ் காமென் மேன் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள பலலட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் அதில் ஒரு 50 பேரை தேர்வு செய்து போடியை நடத்தினர் நிகழ்ச்சி குழு. அந்தப் போட்டிகளை ஜட்ஜ் செய்வதற்காக பிக்பாஸ் தமிழ் முந்தைய சீசன்களின் போட்டியாளர்கள் இருந்தனர்.




காமென்மேன் நிகழ்ச்சியிலிருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் போவது யார்?
அதன்படி முந்தைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட ஆரி, ராஜு ஜெயமோகன், மாயா, ஓவியா மற்றும் கனி ஆகியோர் ஜட்ஜஸ்களாக இருந்தனர். இந்த நிலையில் இந்த காமென் மேன் நிகழ்ச்சியில் போட்டியிட்ட 50 போட்டியாளர்களில் இருந்து மூன்று போட்டியாளர்களை தேர்வு செய்து தற்போது வீட்டிற்குள் அனுப்பியுள்ளனர். அந்த மூன்று நபர்கள் யார் யார் என்றால் ஜான்சன், முனியம்மா மற்றும் ஷாமா ஆகிய மூன்று பேர் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக உள்ளே சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவுகள்:
பிக் பாஸ் இல்லத்தில் #JasonKaushi | #NOWSHOWING | Bigg Boss Tamil Season 10 #GrandLaunch
Bigg Boss Tamil Season 10 #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason10 #TuneInNow #Ottikichi #VijaySethupathi #CarniVizha #Bigg… pic.twitter.com/Ypq6KMNKfl
— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
Also Read… துல்கர் சல்மானின் இந்த கேம் ரசிகர்களிடையே வொர்க் ஆனதா? ஐ அம் கேம் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்
பிக் பாஸ் இல்லத்தில் #Muniyammal | #NOWSHOWING | Bigg Boss Tamil Season 10 #GrandLaunch
Bigg Boss Tamil Season 10 #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason10 #TuneInNow #Ottikichi #VijaySethupathi #CarniVizha #Bigg… pic.twitter.com/SnBjmp03Ir
— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
பிக் பாஸ் இல்லத்தில் #Shama | #NOWSHOWING | Bigg Boss Tamil Season 10 #GrandLaunch
Bigg Boss Tamil Season 10 #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason10 #TuneInNow #Ottikichi #VijaySethupathi #CarniVizha #Bigg BossSeason10Tamil… pic.twitter.com/BrRLZaQq8r
— Vijay Television (@vijaytelevision) September 6, 2026