AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

7 நாட்களில் ஜெயிலர் 2 படத்தின் வசூல் இத்தனை கோடிகளா? வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்

Jailer 2 Movie Box Office Collection | நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர் 2. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

7 நாட்களில் ஜெயிலர் 2 படத்தின் வசூல் இத்தனை கோடிகளா? வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Oct 2026 17:23 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). திரையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது நாயகன் அந்தஸ்தை விட்டுகொடுக்காமல் இருந்து வருகிறார் ரஜினிகாந்த். அதன்படி ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து உலக அளவில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரிதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. வருடத்திற்கு ஒரு படத்தினையாவது தனது நடிப்பில் வெளியிட்டு வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு 15-ம் தேதி அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர் 2. இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தமிழ் சினிமாவில் வெளியானது. திரையரங்குகளில் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் முதல் பாகத்தை இயக்கியது போல இந்த ஜெயிலர் 2 படத்தையும் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பான் இந்திய நட்சத்திரங்களான ரித்திக் ரோஷன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

7 நாட்களில் ஜெயிலர் 2 படத்தின் வசூல் இத்தனை கோடிகளா?

நடிகர் ரஜினிகாந்தின் படம் என்றாலே அது வசூலில் நிச்சயமாக 500 கோடிகளை கடந்துவிடும் என்பது சினிமா வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்களுக்கும் நன்கு தெரிந்த ஒன்றாக உள்ளது. அதன்படி இந்த ஜெயிலர் 2 படமும் உலக அளவில் 7 நாட்களில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்பது குறித்து ஜெயிலர் 2 படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் உலக அளவில் ஜெயிலர் 2 படம் இதுவரை 549 கோடிகளை கடந்து வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… என்ன நடக்குது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில்? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… எனது முந்தைய படங்களை தமிழ் ரசிகர்கள் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி – சீன் பட இயக்குநர் பேச்சு

Follow Us