AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sasikumar: கன்னட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்த சசிகுமார்.. வெளியானது ஷூட்டிங் பூஜை கிளிக்ஸ்!

Sasikumar New Movie: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் சசிகுமார். இவர் தமிழில் தொடர்ந்து புதிய படங்களில் இணைந்து நடித்துவருகிறார். கன்னட இயக்குநருடன் இவர் இணைந்துள்ள புதிய படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று (20/10/2026) ஆரம்பமாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Sasikumar: கன்னட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்த சசிகுமார்.. வெளியானது ஷூட்டிங் பூஜை கிளிக்ஸ்!
சசிகுமார் புதிய திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Oct 2026 14:24 PM IST

இயக்குநராக தமிழ் சினிமாவில் நுழைந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சசிகுமார் (Sasikumar). இயக்குநராக சில படங்களை மட்டுமே இவர் இயக்கியிருந்த நிலையில், அந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட். அந்த விதத்தில் அதன் பிறகு சினிமாவில் முழுவதுமாகாவே நடிகராக நடிக்க தொடங்கிவிட்டார். இவரின் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) திரைப்படமும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் பிறகு இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் மை லார்ட் (My Lord) என்ற படமானது வெளியானது. இந்த படமானது வெளியாகி இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு பிறகு புதிய புதிய படங்களில் இவர் ஒப்பந்தமாகிவந்தார். அந்த விதத்தில் தற்போது கன்னட இயக்குநருடன் (Kannada Director) புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று (20/10/2026) விஜயதசமி தினத்தை முன்னிட்டு பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: அது அட்லீயின் உலகம்… ராக்கா திரைப்படம் குறித்து சூப்பரான அப்டேட் கொடுத்த இயக்குநர் அனல் அரசு!

கன்னட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்த சசிகுமார்:

நடிகர் சசிகுமார் இணைந்துள்ள புதிய படத்தை கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கவுள்ளார். இவர் கன்னட மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த விதத்தில் இவருக்கு தமிழில் முதல் படமாக சசிகுமாருடன் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? அப்டேட் இதோ

இந்த படத்தில் சசிகுமாருடன் ஸ்வாசிகா, நரேன், நந்திதா ஸ்வீதா மற்றும் அஞ்சலி நாயர் போன்ற பிரபலங்கள் இணைந்துள்ளனர். மேலும் இந்த படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் வைப்போதா இசையமைக்கவுள்ளார். தற்போது இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

சசிகுமாரின் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சசிகுமாரின் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இப்படமானது நேரடி தமிழ் திரைப்படமாக உருவாக்கவுள்ள நிலையில், இயக்குநர் ஹரி சந்தோஷின் முதல் தமிழ் படமாகும். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை இன்று தொடங்கியுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் ஷூட்டிங்கும் முழு வீச்சாக ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

Follow Us