AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ராமாயணா படத்தை அனைவரும் 3டியில் பார்க்க வேண்டும் – சாய் பல்லவி!

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சாய் பல்லவி தற்போது பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கி உள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் வெளியாக உள்ள படம் ராமாயணா. இந்தப் படம் குறித்து சாய் பல்லவி பேசியது வைரலாகி வருகின்றது.

ராமாயணா படத்தை அனைவரும் 3டியில் பார்க்க வேண்டும் – சாய் பல்லவி!
சாய் பல்லவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Oct 2026 14:57 PM IST

தென்னிந்திய மொழிகளில் சின்னத்திரையில் நடைபெறும் நடனப் போட்டிகளில் கலந்துகொண்டு அறிமுகம் ஆனவர் சாய் பல்லவி (Sai Pallavi). இவர் தமிழ் சின்னத்திரையில் நடைப்பெற்ற உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற போட்டியிலும் போட்டியாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மருத்துவம் படிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று பிறகு மீண்டும் தமிழ் நாட்டிற்கு வந்தார். அப்போது மலையாள சினிமாவில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலமாகதான் சாய் பல்லவி தனது சினிமா பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவில் அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக அளவில் படங்கள் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவிலும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அதன்படி முன்னதாக இந்தி மொழியில் அவரது நடிப்பில் ஏக் தீன் என்ற படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் அடுத்ததாக ராமாயணா படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சீதை வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராமாயணா படத்தை அனைவரும் 3டியில் பார்க்க வேண்டும்:

அதன்படி நடிகை சாய் பல்லவி பேசியதாவது, இந்த ராமாயணத் திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாக 3D-யில் பார்க்க வேண்டும். நான் இதை முதன்முதலில் அலைபேசியில் பார்த்தேன், அந்த அனுபவம் வேறொரு விதமாக இருந்தது. ஆனால், திரையரங்கில் பார்த்தபோது அது நம்பமுடியாத அளவிற்கு அற்புதமாக இருந்தது. உங்கள் குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள், அவர்களுக்கும் இது நிச்சயம் பிடிக்கும். ராமாயணம் நமக்குத் தெரிந்த கதைதான், ஆனால் இந்தத் திரைப்படம் அந்த கதையை உயிர்ப்பிக்கும் விதம் மிகவும் தனித்துவமானது. இதில் வரும் உயிரினங்கள், காட்சிகள், கதாபாத்திரங்கள் பறக்கும் விதம் என அனைத்தும் மிகவும் இயல்பாகவும் தத்ரூபமாகவும் இருக்கின்றன. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு நாம் பெருமையுடன் கொண்டு செல்லக்கூடிய படைப்பு இது.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த வடிவத்தை நாம் உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். சாதாரணமான அல்லது சுமாரான ஒரு படைப்போடு திருப்தியடைய நாங்கள் விரும்பவில்லை. எவ்வளவு செலவானாலும் சரி, மிகச்சிறந்த தரத்திலான ஒரு படைப்பை வழங்க வேண்டும் என்று விரும்பினோம்; நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவருமே மிகச்சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இசைக்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் போன்ற ஜாம்பவான்கள், சண்டைக் காட்சிகளை வடிவமைக்க மிகச்சிறந்த திறமையாளர்கள் என, ஒரு ஒற்றை இலக்கோடு ஒட்டுமொத்த குழுவும் ஒன்றிணைந்து செயல்பட்டது. உலகமே வியக்கும் வகையிலான ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதே அந்த இலக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் சொல்ல வேண்டிய மிகச்சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

Also Read… 11 ஆண்டுகளை நிறைவு செய்தது 10 எண்றதுக்குள்ள படம்… இயக்குநர் விஜய் மில்டன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வீழா வீரா படலுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு… இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் நெகிழ்ச்சிப் பதிவு!

Follow Us