பிரேமலு 2 படம் கைவிடப்பட்டதற்கு இதுதான் காரணம்… இயக்குநர் ஓபன் டாக்
Director Girish AD talks about Premalu 2 shelved | மலையாள சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பிரேமலு. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் கிரிஷ் ஏடி வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கிரிஷ் ஏடி. மலையாள சினிமாவில் தண்ணீர் மதன் தினங்கள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஆசிரியராக வரும் வினீத் ஸ்ரீநிவாசனுக்கும் மாணவனாக வரும் மேத்யூ தாமஸ் இருவருக்கு இடையே உள்ள கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். முதல் படமே வெற்றியைக் கண்ட இயக்குநர் கிரிஷ் ஏடிக்கு மலையாள சினிமாவில் அடுத்தடுத்து வெளியான படங்களும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் அடுத்தடுத்து சூப்பர் ஷரண்யா, பிரேமலு மற்றும் பெத்தலேகம் குடும்ப யூனிட் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அதன்படி இறுதியாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி மலையாள சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது பெத்தலேகம் குடும்ப யூனிட். இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்று நடைப்பெற்ற போது அந்த விழாவில் பிரேமலு 2 படம் குறித்து இயக்குநர் கிரிஷ் ஏடி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




பிரேமலு 2 படம் கைவிடப்பட்டதற்கு இதுதான் காரணம்:
அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு நடிகர்கள் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் வெளியான் படம் பிரேமலு. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைப்பெற்றது. அதற்காக ஒரு ஆண்டு தனது உழைப்பை போட்ட நிலையில் படம் நடக்காமல் போனது. அதற்கு படக்குழு தரப்பில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் கிரிஷ் ஏடி அதுகுறித்து மனம் வருந்தி பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… ஜெயிலர் 2 படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடிகளா? இணையத்தில் வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Dir #GirishAD about #Premalu Part 2
– A whole year of effort went down the drain with #Premalu2 being shelved. Such a waste, when the sequel never needed to be scrapped in the first place. https://t.co/MJzCRZyRcy
— Movie Tamil (@_MovieTamil) October 19, 2026
Also Read… ப்ளடி ஸ்வீட்… 3 ஆண்டுகளை நிறைவு செய்தது தளபதி விஜயின் லியோ படம்!