AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மேக்கிங் வீடியோவை வெளியிட்டது பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு – வைரலாகும் வீடியோ

Bethlehem Kudumba Unit Making Video | மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் நிவின் பாலி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பெத்தலேகம் குடும்ப யூனிட். இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.

மேக்கிங் வீடியோவை வெளியிட்டது பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு – வைரலாகும் வீடியோ
பெத்தலேகம் குடும்ப யூனிட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Oct 2026 13:55 PM IST

மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது உச்ச நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக ம்ட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து வந்தாலும் அவ்வபோது தமிழ் மொழியிலும் படங்களில் நடித்து உள்ளார். அதன்படி நடிகர் நிவின் பாலி நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஏழு கடல் ஏழு மலை. இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக மலையாள சினிமாவில் வெளியான பெத்தலேகம் குடும்ப யூனிட் படம் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கிய இந்த பெத்தலேகம் குடும்ப யூனிட் படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள சினிமாவில் வெளியான இந்தப் படம் மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேக்கிங் வீடியோவை வெளியிட்டது பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு:

இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழாவை நேற்று படக்குழு நடத்தியது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பெத்தலேகம் குடும்ப யூனிட் படத்தின் மேக்கிங் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் நிவின் பாலியின் தம்பி ஒரு குறும்படம் எடுப்பது போல காட்டபட்டு இருந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த குறும்படத்தை படக்குழு வெளியிட்டு இருந்தது. அது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது பெத்தலேகம் குடும்ப யூனிட் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… க்ரைம் த்ரில்லர் பாணியில் அர்ஜுன் தாஸின் புது படத்தின் டைட்டில் இதுதான் – வைரலாகும் அப்டேட்

பெத்தலேகம் குடும்ப யூனிட் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… இன்று மாலை வெளியாகிறது ஓம் படத்திலிருந்து வீழா வீரா பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Follow Us