பென்ஸ் படம் குறித்து என்னால் எதையும் இப்போது சொல்ல முடியாது – நிவின் பாலி
Nivin Pauly talks about Benz movie | நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் மொழியிலும் அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வருகின்றது. இந்த நிலையில் நிவின் பாலி பென்ஸ் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் தொடர்ந்து மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக நடிகர் நிவின் பாலி நடிப்பில் இறுதியாக மலையாள சினிமாவில் வெளியான படம் பெத்தலேகம் குடும்ப யூனிட். இந்தப் படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ள நிலையில் இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி கேரளாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் சாதனைப் படைத்த படமாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களின் வெற்றி ஒரு பக்கம் இருக்க நடிகர் நிவின் பாலி தமிழ் மொழியிலும் தொடர்ந்து படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இந்தப் படத்தை இயக்குநர் ராம் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற 1-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




பென்ஸ் படம் குறித்து என்னால் எதையும் இப்போது சொல்ல முடியாது:
இந்த நிலையில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் புரமோஷன் பணி போது நிவின் பாலியிடம் ரசிகர் ஒருவர் பென்ஸ் படம் குறித்து கேள்வி எழுப்பினார். அதுகுறித்து பேசிய நிவின் பாலி, பென்ஸ் வேர்ல்ட் குறித்து நான் எதையும் வெளிப்படுத்த முடியாது. ஆனால் ஆம், இது LCU-வுடன் தொடர்புடைய ஒரு திரைப்படம். இதில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் அந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்தவைதான். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் LCU-க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. நானும் டில்லி மற்றும் ரோலக்ஸ் ஆகிய கதாபாத்திரங்களின் தீவிர ரசிகன். அவை அனைத்தும் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளன. இப்போதைக்கு என்னால் இதை மட்டும்தான் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2 – ஷூட்டிங்கை தொடங்கிய படக்குழு… வைரலாகும் பதிவு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
“I can’t reveal anything about #Benz world 👀 But yes, it is an #LCU-connected film, and all these characters exist within that universe. The #LCU has a huge fan base in both Tamil Nadu and Kerala. I’m also a big fan of #Dilli and #Rolex. All of that is there in this film 🔥…
— Movies Singapore (@MoviesSingapore) September 29, 2026
Also Read… பிக்பாஸ் ரோப் டாஸ்கில் அஸ்மிதாவை கடுப்பேற்றும் சாவன்யா வேலு – வைரலாகும் வீடியோ