#Love: காதல் என்று வரும்போது, பொருத்தத்தை விட ஈர்ப்பு மேலோங்குமா? இணையத்தில் வைரலாகும் #லவ் பட ட்ரெய்லர்!
Balaji Mohans #Love Movie Trailer: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் தனது குரலின் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். இவரின் நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாக காத்திருக்கும் படம் #லவ். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இயக்குநர் பாலாஜி மோகன் (Balaji Mohan) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் (Dhanush) முதல் துல்கர் சல்மான் (Dulquer Sanlaam) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களின் படங்களை இவர் இயக்கியுள்ளார். இறுதியாக இவர் தமிழில் இயக்கியிருந்த திரைப்படம் மாரி 2 (Maari 2). இந்த படமானது கடந்த 2018ம் ஆண்டில் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு அவர் எந்த படங்களையும் இயக்கவில்லை. அதற்கு பதிலாக சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார். இறுதியாக திரிசங்கு என்ற மலையாளம் படத்தில் நடித்திருந்தார். அந்த விதத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவரின் இயக்கத்தில் தமிழில் வெளியாக காத்திருக்கும் படம்தான் #லவ் (#Love). இதில் அர்ஜுன்தாஸ் (Arjun Das) மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி இணைந்து நடித்துள்ளனர்.
வித்தியாசமான காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கும் நிலையில், இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்!
அர்ஜுன்தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் #லவ் படத்தின் ட்ரெயிலர் குறித்த எக்ஸ் பதிவு:
Trailer of my Tamil Netflix series #Love 🙂
Out on @NetflixIndia from Oct 2nd. https://t.co/QkhlqHyNO0— Balaji Mohan (@directormbalaji) September 25, 2026
#லவ் திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இப்படத்தில் அர்ஜுன்தாஸ் மிகப்பெரிய தொழிலதிபரின் ஒருவராக இருக்கிறாரா. மேலும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஒரு டேட்டிங் ஆப்-பின் CEO-வாக் இருக்கிறார். சிங்கிளாக இருக்கும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி எவ்வாறு அர்ஜுன்தாஸுடன் நெருக்குங்குகிறார். அவர்களின் நெருக்கத்தினால் இருவருக்கும் இடையே எவ்வாறு காதல் மலர்கிறது மற்றும் இவர்கள் காதலுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் போன்றவற்றை இந்த ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன்தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி இருவரின் காமினேஷன் நன்றாக இருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ஒருமணி நேரமாக தூக்கம் வரவில்லை.. விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பற்றி பேசிய சிவராஜ்குமார்!
#லவ் படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த படத்தை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். அவருடன் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சிறப்பான மற்றும் வித்தியாசமான காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடிடியில் வெளியாகும் நிலையில், நிச்சயமாக வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.