இணையத்தில் வைரலாகும் சிக்மா படத்தின் 4-வது சிங்கிள் சுலோச்சனா!
Sulochana Lyrical Video From Sigma Movie | இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் சிக்மா. இந்தப் படத்தில் இருந்து 4-வது சிங்கிளாக வெளியான சுலோச்சனா இணையத்தில் ரசிகர்களிடையே தற்போது அதிக அளவில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக அறிமுகம் ஆகிறார் ஜேசன் சஞ்சய். இவரது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குநராக வலம் வந்த நிலையில் ஜேசனின் தந்தை தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தார். இவர் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்று சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகிய நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி தமிழ் சினிமாவில் நாயகனாக வருவார் என்று ஜேசன் சஞ்சயை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் இயக்குநராக வந்து அனைவரையும் சர்ப்ரைஸ் செய்துள்ளார். அதன்படி தமிழ் சினிமாவில் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ள படம் சிக்மா. இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்புதாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




இணையத்தில் வைரலாகும் சிக்மா படத்தின் 4-வது சிங்கிள் சுலோச்சனா:
மேலும் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 02-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் சிக்மா படத்தில் இருந்து 4-வது சிங்கிள் வீடியோவான சுலோச்சனா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை நேற்று 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு படக்குழு வெளியிட்டது. அந்த பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… டோரத்தி படம் எப்படி இருக்கும்? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்
சிக்மா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s time to vibe with #Sulochana 💃🏻 The 4th single from the world of #Sigma is out now. 🔥 Turn up the volume. 🔊
Tamil 🔗 https://t.co/2v1t73bSCd
Telugu 🔗 https://t.co/W8VzeBJzYA#SigmaInCinemasOct2@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan… pic.twitter.com/4PHGVphRSj— Lyca Productions (@LycaProductions) September 25, 2026
Also Read… பிக்பாஸ் டெமோகிரஸி ரூமில் வெடித்த பிரச்சனை… சண்டையிடும் போட்டியாளர்கள்!